உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், ஹூண்டாய் வெனியூ கார் இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி இறுதியாக நாளை (மே 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 10.66 லட்ச ரூபாயாக இருக்கலாம் என சமீபத்தில் ஆட்டோமொபைல் தளங்களில் செய்திகள் வெளியாயின.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

இதனை வைத்து பார்த்தால் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டின் விலை 7.5 லட்ச ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில், ரூ.7.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான விலைகளில் ஹூண்டாய் வெனியூ விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹூண்டாய் வெனியூ காரின் அதிகாரப்பூர்வ விலை நாளை தெரிந்து விடும்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

ஹூண்டாய் வெனியூ கார் E, S, SX மற்றும் SX(O) என 4 ட்ரிம் லெவல்கள் மற்றும் 13 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. வெனியூ காரின் உற்பத்தி சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. அத்துடன் டீலர்ஷிப்களுக்கு கார்களை அனுப்பும் பணிகளும் கூட தொடங்கப்பட்டு விட்டன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் டீலர்ஷிப்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக ரூ.21 ஆயிரம் முன்பணம் செலுத்தி, ஹூண்டாய் வெனியூ காரை புக்கிங் செய்து கொள்ளலாம். டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ நேரடியாக மோதவுள்ளது.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

7 சிங்கிள் டோன் கலர்கள் மற்றும் 3 ட்யூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம்களில் ஹூண்டாய் வெனியூ விற்பனை செய்யப்படும். சிங்கிள் டோன் கலர்கள் பின்வருமாறு: ஸ்டார் டஸ்ட், போலார் ஒயிட், ஃபயரி ரெட், டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்ச், டைபூன் சில்வர் மற்றும் டெனிம் ப்ளூ. ட்யூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம்கள் பின்வருமாறு: டெனிம் ப்ளூ/போலார் ஒயிட் ரூஃப், போலார் ஒயிட்/பாந்தம் ப்ளாக் ரூஃப் மற்றும் லாவா ஆரஞ்ச்/பாந்தம் ப்ளாக் ரூஃப்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

1.0 லிட்டர் எஸ்எக்ஸ் மற்றும் 1.4 எஸ்எக்ஸ் வேரியண்ட்களில் மட்டுமே ட்யூயல் பெயிண்ட் ஆப்ஷன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை வெனியூ காரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கவுள்ளது.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

இதில், நேச்சுரலி அஸ்பிரேடட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இன்ஜின் சக்தியானது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழியாக முன் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. அதே சமயம் டர்போசார்ஜ்டு 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் என மொத்தம் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரில் ஏராளமான உயர்தர வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...

இதில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ப்ரொஜெக்டர் பனி விளக்குகள், நேவிகேஷன், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

Most Read Articles
English summary
Hyundai Venue Launch Tomorrow: Expected Price, Features. Read in Tamil
Story first published: Monday, May 20, 2019, 21:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X