கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த புதிய ஹூண்டாய் கார்

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலையில் களமிறக்கப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கார், விற்பனைக்கு அறிமுகமான ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்துள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வெனியூ காரை கடந்த மே 21ம் தேதியன்று ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் உடனடியாக டெலிவரியும் தொடங்கப்பட்டது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

மிகவும் குறைவான விலையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் களமிறக்கப்பட்டுள்ளதால், ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை வீழ்த்தி, இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இரண்டாவது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் என்ற பெருமையை, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடைந்துள்ளது ஹூண்டாய் வெனியூ.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 7,049 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. இதே கால கட்டத்தில் மஹிந்திரா நிறுவனத்தால் வெறும் 5,113 எக்ஸ்யூவி300 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இத்தனைக்கும் ஹூண்டாய் வெனியூ கார் மே மாத கடைசியில்தான் விற்பனைக்கே அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில், எக்ஸ்யூவி300 காரை பின்னுக்கு தள்ளி விட்டு, வெனியூ 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இதில், மற்றொரு பரிதாபகரமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில், டாடா நிறுவனத்தின் நெக்ஸான்தான் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஆனால் அதனை பின்னுக்கு தள்ளி விட்டு, கடந்த ஏப்ரல் மாதம்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்தது. இருந்தபோதும் வெனியூ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது மீண்டும் மூன்றாவது இடத்திற்கே தள்ளப்பட்டுள்ளது எக்ஸ்யூவி300.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஆனால் அதிகம் விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாதான் முதலிடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் இந்த பெருமை இன்னும் எத்தனை நாளுக்கு என்பது தெரியவில்லை.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஏனெனில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனையில், ஹூண்டாய் வெனியூ கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் 8,781 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் குறைவு என்பதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 15,629 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்திருந்தது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இந்த எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட சரி பாதியாக குறைந்துள்ளது. எனவே வரும் மாதங்களில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரையும் பின்னுக்கு தள்ளி விட்டு ஹூண்டாய் வெனியூ முதலிடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

அதே சமயம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தை மட்டும் கணக்கில் வைத்து கொண்டு, ஒரு காரின் விற்பனை நிலவரத்தை சரியாக கணிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

புதிதாக அறிமுகம் செய்யப்படும் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். விளம்பரங்களினால் அவர்கள் ஈர்க்கப்படலாம். அத்துடன் பெருமை காரணமாகவும் ஒரு சிலர் புதிதாக அறிமுகம் செய்யப்படும் கார்களை வாங்குகின்றனர்.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

விற்பனைக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், அந்த சமயத்தில் வேறு யாரிடமும் அந்த கார் இருக்காது என்பது ஒரு விதமான பெருமிதத்தை கொடுக்கலாம். எனவே ஹூண்டாய் வெனியூ காரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஆனால் நடப்பு ஜூன் மாதமும் இதே இரண்டாவது இடத்தை ஹூண்டாய் வெனியூ தக்க வைத்து கொண்டால், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கு உண்மையிலேயே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

ஹூண்டாய் வெனியூ கார் வழங்கும் மிக கடுமையான போட்டியை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து மற்ற நிறுவனங்கள் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்த நேரத்தில் தங்கள் நிறுவன கார்களுக்கு அவர்கள் தள்ளுபடியை வழங்கலாம்.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இதன் மூலம் ஹூண்டாய் வெனியூ மீதே குவிந்துள்ள வாடிக்கையாளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் அவர்களால் ஈர்க்க முடியும். வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் வெனியூ காருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் விலையை நிர்ணயம் செய்திருப்பது முக்கியமான காரணங்களில் ஒன்று. வெனியூ காரின் ஆரம்ப விலை வெறும் 6.50 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 11.10 லட்ச ரூபாய்.

கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலை... ஒரு சில நாட்களிலேயே இந்தியாவை அதிர வைத்த ஹூண்டாய் கார்

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதுதவிர வெனியூ காரில் ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு அதிநவீன வசதிகளையும், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai Venue Outsells Mahindra XUV 300 In May 2019. Read in Tamil
Story first published: Wednesday, June 5, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X