இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

அதிநவீன வசதிகள், சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறன் என அனைத்து விஷயங்களிலும் அசத்தும் ஹூண்டாய் வெனியூ கார் நம்ப முடியாத மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை தெரிந்தால் நீங்கள் இன்றே முன்பதிவு செய்து விடக்கூடும்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார் இன்று (மே 21ம் தேதி) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு ஹூண்டாய் வெனியூ வடிவில் கடும் சவால் காத்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

யாருமே எதிர்பார்க்காத மிக குறைவான விலை, சிறப்பான செயல்திறன், அதிநவீன வசதிகள் என பல்வேறு விஷயங்களில் ஹூண்டாய் வெனியூ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதன் காரணமாக இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் வெனியூ புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

செக்மெண்ட்டிலேயே மிக வேகமான கார்:

இந்திய மார்க்கெட்டில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் வெனியூ களமிறக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 1.4 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வெனியூ காரில் வழங்கப்படுகின்றன.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இதில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, மூன்று-சிலிண்டர் இன்ஜின்தான் அதிக சக்தி வாய்ந்தது. அத்துடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் ஒரே இன்ஜினும் இது மட்டுமே. வெனியூ ஆட்டோமெட்டிக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 187 கிலோ மீட்டர்கள்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

அதாவது ஸ்பீடோமீட்டர் மணிக்கு 190 கிலோ மீட்டர்களுக்கும் மேற்பட்ட வேகத்தை காட்டும். அத்துடன் 1.0 லிட்டர் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, வெறும் 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

MOST READ: சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது. இன்று காலை நடைபெற்ற வெனியூ காரின் அறிமுக விழாவில் ஹூண்டாய் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

அதிக எரிபொருள் சிக்கனம்:

ஹூண்டாய் வெனியூ காரின் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களும் நல்ல மைலேஜ் வழங்க கூடியவை. ஹூண்டாய் வெனியூ காரின் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் 82 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது.

MOST READ: மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 17.52 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். அதேசமயம் 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 118 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் லிட்டருக்கு 18.27 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.

MOST READ: மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

அதே நேரத்தில் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 18.15 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. 1.4 லிட்டர் டீசல் இன்ஜினில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23.7 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். இவை அனைத்து அராயால் (ARAI - Automotive Research Association of India) சான்று அளிக்கப்பட்ட மைலேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

செக்மெண்ட்டிலேயே மிக குறைவான பராமரிப்பு செலவு:

இந்த செக்மெண்ட்டிலேயே குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார் வெனியூதான் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி, டாடா, மஹிந்திரா மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்களின் கார்கள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இவற்றில் வெனியூ காரை பராமரிப்பதற்கான செலவுதான் மிக குறைவாக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் கூறியுள்ளது. என்றாலும் வெனியூ காருக்கான பராமரிப்பு செலவு எவ்வளவு? என்ற தகவலை ஹூண்டாய் நிறுவனம் வெளியிடவில்லை.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

நம்ப முடியாத மலிவான விலை:

ஹூண்டாய் வெனியூ காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் கூட மிகவும் மலிவான விலையில் வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

போட்டி நிறுவனங்களோ அதிர்ச்சியில் உறைந்துள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் கூடிய வெனியூ காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 6.5 லட்ச ரூபாய் மட்டுமே! அதே சமயம் பேஸ் டர்போசார்ஜ்டு பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 8.21 லட்ச ரூபாய்தான்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

ஹூண்டாய் வெனியூ காரின் மிகவும் மலிவான ஆட்டோமெட்டிக் வேரியண்ட்டின் விலை 9.35 லட்ச ரூபாய். அதே சமயம் வெனியூ காரின் மிகவும் மலிவான டீசல் வேரியண்ட்டை வெறும் 7.75 லட்ச ரூபாயில் உங்களால் வாங்க முடியும்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

எண்ட்ரி-லெவல் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விலையே 7.85 லட்ச ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் டாடா நெக்ஸான் காரின் பேஸ் வேரியண்ட்தான் இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் மலிவான விலை கொண்ட கார். அதன் விலை 6.48 லட்ச ரூபாய்.

இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் வெனியூ கார்களை விற்பனை செய்ய வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேற்கண்ட சிறப்பம்சங்கள் காரணமாக இந்த இலக்கு மிக எளிதாக எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai Venue Top 4 Things To Know. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X