ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ஒரே நேரத்தில் நியூயார்க் ஆட்டோ ஷோவிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.

சந்தைப் போட்டி மிகுந்த ரகத்தில் களமிறக்கப்படுவதால் போட்டியாளர்களைவிட பல்வேறு கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. மேலும், இது நேரடி இணைய வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்துடன் வர இருக்கிறது.

முகப்பில் பிரம்மாண்ட க்ரோம் கரில் அமைப்பு, தாழ்வாக அமைக்கப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், ஹெட்லைட் க்ளஸ்ட்டரை சுற்றிலும் எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முத்தாய்ப்பான விஷயங்கள். ஆனால், முகப்பு டிசைன் முற்றிலும் புதியதாக வந்துள்ளது.

அதேநேரத்தில், பக்கவாட்டில் க்ரெட்டா எஸ்யூவியை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கச்சிதமான வீல் ஆர்ச்சுகள், அலாய் வீல்கள் நேர்த்தியான தோற்றத்தை தருகின்றன. சதுர வடிவிலான டெயில் லைட்டுகள் மற்றும் இரட்டை வண்ணக் கலவை ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட்செய்யும். மேலும், ஹூண்டாய் புளூலிங்க் சாஃப்ட்வேர் மூலமாக 33 விதமான தகவல் தொழில்நுட்ப வசதிகளை இந்த சாதனம் மூலமாக பெற முடியும்.

 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் அறிமுகம்

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் என மூன்று விதமான ஆப்ஷன்களில் வர இருக்கிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

அடுத்து 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். இந்த டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது. மூன்றாவதாக, புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 120 பிஎச்பி பவரை வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

அடுத்த மாதம் 21ந் தேதி இந்தியாவில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு சில டீலர்களில் முன்பதிவு துவங்கி நடக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்க இருக்கிறது.

Most Read Articles
English summary
ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி அறிமுகம், புதிய ஹூண்டாய் வெனியூ கார் படங்கள், தகவல்கள்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X