புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

வரும் 21ந் தேதி புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும், டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

இந்த நிலையில், இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளும் வசதிகள் மற்றும் கியர்பாக்ஸை பொறுத்து E, S, SX, SX(O) ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளானது 8 வேரியண்ட்டுகளாகவும், டீசல் எஞ்சின் ஆப்ஷன் 5 விதமான வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

முதலாவாதாக, 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலானது E மற்றும் S ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

அதேநேரத்தில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலானது S, SX, SX Dual Tone, SX (O) ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேநேரத்தில், பெரிதும் ஆவலை ஏற்படுத்தி உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினின் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலானது S மற்றும் SX+ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வர இருக்கிறது. இந்த மாடலானது E, S, SX, SX Dual Tone மற்றும் SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். SX+ என்ற டாப் வேரியண்ட் ஆப்ஷன் இல்லை.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

இதுதவிர்த்து, புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியானது ஏழு விதமான வண்ணங்கள் மற்றும் மூன்றுவிதமான இரட்டை வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. ஃபியரி ரெட், ஸ்டார் டஸ்ட், போலார் ஒயிட், டீப் ஃபாரஸ்ட், தைபூன் சில்வர், லாவா ஆரஞ்ச், டெனிம் புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

மேலும், டெனிம் புளூ - போலார் ஒயிட், லாவா ஆரஞ்ச் - ஃபான்டம் பிளாக் மற்றும் போலார் ஒயிட் - ஃபான்டம் பிளாக் ஆகிய மூன்றுவிதமான இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த இரட்டை வண்ணத் தேர்வானது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் SX வேரியண்ட் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை புக்கிங் பண்ண போறீங்களா?

டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸாவுக்கு கடும் போட்டியை தரும்.

Most Read Articles
English summary
Here is the details of all new Hyundai Venue variants and paint scheme options will be offered in India
Story first published: Friday, May 3, 2019, 10:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X