ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் வெர்னா கார் டாப் - 3 தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சிறந்த டிசைன், அதிக வசதிகள், நம்பகமான எஞ்சின்கள் என அனைத்திலும் நிறைவான மிட்சைஸ் செடான் கார்களில் ஒன்றாகவும், விற்பனையிலும் மிக முக்கிய மாடலாகவும் விளங்குகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

சந்தைப் போட்டி மிகுதியால் அவ்வப்போது இந்த கார் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஹூண்டாய் வெர்னா கார் டிசைனிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சீனாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனிடையே, புதிய ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக அதன் ஸ்பை படங்கள் வெளியாகி கார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது 4,405 மிமீ நீளத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,600 மிமீ ஆக இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் வெர்னா காரின் முகப்பு டிசைன் முற்றிலுமாக மாறி இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

ஹெட்லைட் மற்றும் க்ரில் அமைப்பு இணைந்தாற்போல் மிக பிரம்மாண்டமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பம்பரும் மிக முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. பார்ப்பதற்கு பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

கூபே கார்கள் போன்றே கூரை அமைப்பு பின்புறத்தில் வெகுவாக தாழ்ந்து செல்லும்படியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய அலாய் வீல்கள், க்ரோம் கைப்பிடிகள், கருப்பு வண்ண பி பில்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

காரின் பின்புறமும் முற்றிலுமாக மாற்றம் கண்டுள்ளது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் இரண்டும் இணைந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், பம்பரும் முரட்டுத்தனமாக தெரிகிறது. ஸ்போர்ட்ஸ் செடான் கார் போன்று காட்சி தருகின்றது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

சீனாவில் புதிய வெர்னா காரில் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். இந்தியாவிலும் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

இந்தியாவில் இந்த புதிய மாடல் வரும்போது 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சினும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இந்த எஞ்சின்கள் வர இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹூண்டாய் வெர்னா கார் காட்சிக்கு கொண்டு வரப்படும். ஏப்ரலில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Autohome

Most Read Articles
English summary
The first images of the Hyundai Verna facelift have leaked online. The car was seen in China.
Story first published: Friday, July 19, 2019, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X