ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது போட்டியாளர்களை மிரட்டும் எண்ணிக்கையாக அமைந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி அடுத்த மாதம் 21ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்பது இப்போதே உறுதியாகி இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

டிசைன், தொழில்நுட்ப வசதிகள், எஞ்சின் தேர்வுகளில் போட்டியாளர்களை விஞ்சும் அம்சங்களுடன் வருவதால், இப்போதே பலரும் இந்த புதிய எஸ்யூவியை புக்கிங் செய்வதற்கு கியூ கட்டத் துவங்கி இருக்கின்றனர். சில ஹூண்டாய் டீலர்களில் ரகசியமாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

இந்த சூழலில், மாதத்திற்கு 9,000 வெனியூ எஸ்யூவிகளை உற்பத்தி செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிக்கும், இதர போட்டியாளர்களுக்கும் இந்த புதிய வெனியூ எஸ்யூவி கடும் நெருக்கடியை தரும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் புளூலிங்க் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சாதனம் பொருத்தப்பட இருக்கிறது. அவசர கால உதவி, காரின் நகர்வை கட்டுப்படுத்தும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

இதுதவிர, இந்த காரில் 82 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

இந்த காரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் இன்டீரியர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்!

புதிய ஹூண்டாய் வெனியூ கார் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டை புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி அதகளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Most Read Articles
English summary
Hyundai's new SUV, the Hyundai Venue is expected to a huge success in the Indian markets, and Hyundai says they are equipped to produce units to meet high demands. Hyundai prepped for up to 9000 units a month.
Story first published: Friday, April 19, 2019, 9:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X