காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்.. வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...

ஹூண்டாய் நிறுவனம் கார்களை ஸ்மார்ட்போன்மூலம் எளிதில் கையாளும் வகையில் மென்பொருள் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த மென்பொருளானது சாதாரண சாவியைக் காட்டிலும் பலமடங்கு பணியை மேற்கொள்ளும் விதத்தில் உறுவாக்கப்பட்டுள்ளது.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

உலகமே நவீனமயமாகி வரும்நிலையில் தென்கொரியாவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமும், தனது புதிய தயாரிப்புகளில் நவீன முறையைப் புகுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றது. இதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் வழக்கமான சாவிக்கு மாற்றாக 'டிஜிட்டல் கீ' முறையை நடைமுறைக்குக் கொண்டுவரும் முற்சியில் ஈடுபட்டுள்ளது.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

ஹூண்டாய், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாக இந்த புதிய தொழில்நுட்பத்தை தனது தயாரிப்பு கார்களில் இணைக்கும் முயற்சியைச் செய்து வருகிறது. இந்த முயற்சி மூலம் எதிர்காலத்தில் ஹூண்டாய் கார்களுக்கு சாவி தேவைப்படாது. ஏனென்றால், வழக்கமான சாவிகள் செய்யும் அனைத்தும் வேலைகளையும் இந்த டிஜிட்டல் சாவி செய்துவிடும்.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

இந்த 'டிஜிட்டல் கீ' முறையில் வாடிக்கையாளர்களுக்கு, ஹூண்டாய் காருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆப், ரிமோட் மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

இந்த ஸ்மார்ட்போன் ஆப் மூலம் காரின் கண்ட்ரோல்களை எளிதாக கட்டுபடுத்த முடியும். அவ்வாறு, லாக் மற்றும் அன்லாக் செய்வது, கண்ணாடி மற்றும் சீட் பொஷினனை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கண்ட்ரோல்களை எளிதாக செய்யமுடியும். மேலும், ஆடியோ, கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவையையும் இந்த டிஜிட்டல் சாவிமூலம் கண்ட்ரோல் செய்துகொள்ளலாம்.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

ஹூண்டாயின் இந்த டிஜிட்டல் சாவியை, ஸ்மார்ட்போன் மூலம் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் நான்கு பேருக்கு பரிமாறிக்கொள்ள முடியும். இதன்மூலம், காரின் உரிமையாளரைத் தொடர்ந்து, மற்ற நான்குபேரும் காரைப் பயன்படுத்தலாம். அதேபோன்று, காரின் ஓட்டுநர் குறித்த தகவலையும் இந்த ஆப் மூலம் பதிவு செய்து அவருக்கு தேவையான ஆக்ஷஸை வழங்கலாம். இதன்மூலம் காருக்கான ஓட்டுநரை காரைப் பயன்படுத்த அனுமதிக்க முடியும்.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள ஆப், உரிமையாளர் காரை நெருங்கும்போது சிக்னல் கொடுக்கும். இது கார் கதவின் கைப்பிடியில் பொருத்தப்பட்டுள்ள ரிசீவருக்கு தகவல் கொடுக்கும். மேலும், இரண்டாவதாக காருக்குள் இருக்கும் ஒயர்லெஸ் சார்ஜருக்கும் சிக்னல் கடத்தப்படும். இந்த சிக்னல்கள் காரின் உரிமையாளர் வந்திருப்பதை அறிந்து தானகவே செயல்பட ஆரம்பித்துவிடும்.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

ஹீண்டாயின் இந்த பிரத்யேக 'டிஜிட்டல் கீ ஆப், காரின் உரிமையாளரைத் தவிர்த்து மற்றவர்கள் காரை இயக்கும்போது இலக்கு உள்ளிட்ட சேருமிடம் குறித்த தகவலைப் பதிவிட்டுக்கொள்ளலாம். இதனால், காரை எடுத்துச் செல்லும் மூன்றாம் நபர் எல்லைத் தாண்டி சென்றாலே, அதிவேகமாக காரை இயக்கினாலே ஸ்மார்ட்போனில் ஆலாரம் எழுப்பி எச்சரிக்கைக் கொடுக்க ஆரம்பித்துவிடும். இதன்மூலம் காரின் உரிமையாளர் உடனடியாக விழிப்புணர்வு பெறமுடியும். மேலும், கார் திருடப்படுவது தவிர்க்கப்படும்.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

இதைத்தொடர்ந்து, ஹூண்டாய் காரை சர்வீஸுக்குக் கொடுக்கும்போது, ஸ்மார்ட்போனைக் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாற்றாக, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ரிமோட் அல்லது ஸ்மார்ட் கார்டை கொடுத்தால் போதுமானது. இந்த ஸ்மார்ட் கார்டானது ஸ்மார்ட்போன் ஆப்-பிற்கு இணையான அனைத்து பணியையும் மேற்கொள்ளும்.

காருக்கு சாவி தேவையில்லை ஸ்மார்ட்போன் போதும்... வந்துவிட்டது புதிய 'டிஜிட்டல் கீ' ஸ்மார்ட்போன் ஆப்...!

முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம், இந்த புதிய தொழில்நுட்பத்த இனிவரும் தயாரிப்புகளில் இணைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி, இந்த தொழில்நுட்பத்தை தற்போது இந்த நிறுவனம் நடைமுறைக்குக்கொண்டுவந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai's Latest Smartphone APP Turns Like Your Car Key. Read In Tamil.
Story first published: Friday, March 8, 2019, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X