முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

லண்டனில் உள்ள லலித் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொலைக்காட்சி விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புத்தம் புதிய எஸ்யூவியுடன் இந்தியாவில் களமிறங்க உள்ளது. ஹெக்டர் என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த எஸ்யூவி மாடல் சமீப காலமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறித்த ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வந்ததால், இந்த எஸ்யூவியின் டிசைன் அம்சங்கள் குறித்த யூகத் தகவல்கள்தான் இதுவரை வெளியாகி வந்தன. இந்த நிலையில், அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் படங்கள் சமூக வலைத்தள பக்கம் மூலமாக வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் லண்டனில் உள்ள லலித் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொலைக்காட்சி விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் சமூக வலைத்தள பக்கம் ஒன்றின் மூலமாக வெளியாகி இருக்கிறது.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அறிமுகமாகும்போது இந்த விளம்பரமும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த விளம்பர படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவர் ஜாகுவார் லேண்ட்ரோவர் விளம்பரங்களிலும் தோன்றியிருக்கிறார்.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி டிசைனில் மிக அசத்தலாக இருக்கிறது. நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது. பிரிமீயம் ரக கார் போன்ற தோற்றத்துடன் வசீகரிக்கிறது.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை பயன்படுத்தி இந்த புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை செயிக் குழுமம் உற்பத்தி செய்ய இருக்கிறது. மேலும், 75 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்கள்தான் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருப்பதால், விலை மிக சவாலாக இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் ஏராளமான சிறப்பு வசதிகளை அளிப்பதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதாவது, போட்டி எஸ்யூவிகளில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இந்த எஸ்யூவியில் இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்த எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஹார்மன் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

இந்த எஸ்யூவியானது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது செயிக் - எம்ஜி இணைந்து தயாரித்த டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

ஆட்டோமேட்டிக் மாடலில் அதிக செயல்திறனை வழங்கும் ஸ்போர்ட் டிரைவ் மோடு மற்றும் பேடில் ஷிஃப்ட் வசதிகளும் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களை பல்வேறு நாடுகளில் வைத்து 2.6 மில்லியன் கிலோமீட்டர் தூரம் எம்ஜி நிறுவனம் சோதனை ஓட்டம் நடத்தி இருக்கிறது.

முதல்முறையாக புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முழு தரிசனம்!

ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்படும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் இந்த எஸ்யூவியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும். சீனாவில் விற்பனை செய்யப்படும் பவ்ஜுன் 530 எஸ்யூவியின் அடிப்படையில் இந்த எஸ்யூவி இந்திய மார்க்கெட்டிற்காக பல்வேறு மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Image Courtesy:Cumberphotos, Eurocarspotter

Most Read Articles
English summary
India Bound MG Hector SUV Revealed In First Clear Images.
Story first published: Monday, March 18, 2019, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X