கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட்டில் அசத்தி இருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல் டி க்ராஸ். இந்த எஸ்யூவியை ஐரோப்பிய என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தி ஆய்வு நடத்தியது. இந்த காரில் 4 ஏர்பேக்குகள், லேன் அசிஸ்ட் வசதி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

இதன் நிகர எடை 1,204 கிலோவாக இருக்கிறது. மோதல் ஆய்வுகளின் முடிவு அறிக்கையில், இந்த கார் 5க்கு 5 என்ற அதிகபட்சமான 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. முன்புற சோதனையின்போது, காரின் கேபின் மிக வலுவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கு கால் மற்றும் தொடை பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு உயரம் கொண்டவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பை இந்த கார் உறுதி செய்வதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவிற்கான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 என்ற பிளாட்ஃபார்மில் பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட இருக்கிிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி 4,110 மிமீ நீளம் கொண்டுள்ள நிலையில், இந்தியாவிற்கான மாடல் 4,250 முதல் 4,300 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த கார் ஃபோக்ஸ்வேகன் கார்களின் முத்தாய்ப்பான டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இன்டீரியரிலும் பிரிமீயமாக இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும். சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்டுகளும் இதர முக்கிய அம்சங்களாக இருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், மாருதி எஸ் க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். மேலும், பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.10 லட்சம் ரூ.15 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
India bound Volkswagen T Cross Scores 5 star rating in Euro NCAP crash test.
Story first published: Monday, May 27, 2019, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X