பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

அமெரிக்கா மற்றும் ஈரான் அரசுகள் இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் இதனை மீறி, அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. அத்துடன் இதன் காரணமாக ஈரானுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தையும் அமெரிக்கா முறித்து கொண்டது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து, கடந்த 2018ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்கா விலகியது. இதன்பின் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய்தான் ஈரான் அரசின் முதுகெலும்பு. அதனை தகர்த்து விட்டால், ஈரான் வழிக்கு வந்து விடும் என்பது அமெரிக்காவின் எண்ணம்.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

எனவே ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்த உத்தரவை மீறும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியை அமெரிக்கா காலக்கெடுவாக நிர்ணயம் செய்திருந்தது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

அதாவது இந்தியா உள்பட உலகின் எந்த ஒரு நாடும், 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

இதன் விளைவாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில், இந்தியா உள்பட உலகின் 8 நாடுகளுக்கு மட்டும் அமெரிக்கா விலக்கு அளித்தது. ஆனாலும் கூட அமெரிக்கா முழுமையாக மனம் இறங்கி வரவில்லை. இந்தியா உள்பட உலகின் 8 நாடுகளுக்கும் ஒரு நிபந்தனையுடன்தான் அமெரிக்கா விலக்கு அளித்தது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

அதாவது விலக்கு அளிக்கப்பட்ட 8 நாடுகளுக்கும் அமெரிக்கா 6 மாத காலக்கெடுவை வழங்கியது. இந்த 6 மாத காலக்கெடுவிற்குள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா விதித்தது. இந்த 6 மாத காலக்கெடு வரும் மே 1ம் தேதியுடன் முடிவிற்கு வருகிறது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

இந்த சூழலில் வரும் மே 1ம் தேதியுடன் நிறைவடைய உள்ள காலக்கெடுவை இனி மேலும் நீட்டிக்க முடியாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளில் ஒருவரான மைக்கேல் ஆர் பாம்ப்போ கூறுகையில், ''இனி எவ்விதமான விலக்கையும் நாங்கள் அளிக்கப்போவதில்லை என தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று (ஏப்ரல் 22) அளித்த பேட்டியில் மைக்கேல் ஆர் பாம்ப்போ இதனை தெரிவித்தார்.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக இந்தியா பெரும் ஆபத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 84 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

குறிப்பாக இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டில் மட்டும் ஈரானில் இருந்து, 24 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய வாடிக்கையாளராக இந்தியா திகழ்கிறது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

இப்படிப்பட்ட சூழலில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் அமெரிக்காவின் உத்தரவை ஏற்க மறுத்து, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்தால், அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டாக வேண்டிய அபாயமும் இந்தியாவிற்கு உள்ளது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த சமயத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கலை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடும் அபாயம் உள்ளது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

நேற்றைய தினமே சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 74 டாலர்களாக உயர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 மாத கால அளவில் பார்த்தால், இதுதான் அதிகபட்ச விலை. விலை உயர்வு இதே நிலையில் நீடித்தால், நாடாளுமன்ற பொது தேர்தலின் பிந்தைய கட்டங்களில், பாஜகவிற்கு பாதிப்பு ஏற்படலாம்.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

ஆனால் இந்தியாவில் தற்போது உடனடியாக தட்டுப்பாடு ஏற்பட்டு விடாது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையும் மீறி ஒரு வேளை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானால், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மோடிக்கு ஏற்பட்ட திடீர் ஆபத்து இதுதான்... தேர்தலில் மண்ணை கவ்வலாம் என்பதால் பாஜக பதற்றம்...

இதுதவிர ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்தும், சாமானிய வாகன ஓட்டிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Most Read Articles
English summary
India's Crude Oil Import Plans Post US Sanctions
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X