இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் எரிபொருள் வகை டிராக்டர் மாடலை எஸ்கார்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத எரிபொருள் வகை வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், டிராக்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் எஸ்கார்ட்ஸ் நிறுவனம் முதல் முறையாக ஹைப்ரிட் வகை டிராக்டர் மாடலின் கான்செப்ட்டை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

பொதுவாக, இந்தியாவில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் வகை வாகனங்கள் கிடைக்கின்றன. ஆனால், இந்த டிராக்டரானது டீசல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் என புதிய ஹைப்ரிட் வகை மாடலாக வந்துள்ளது.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

புதிய எஸ்கார்ட்ஸ் ஃபார்ம்டிராக் ஹைப்ரிட் டிராக்டர் மாடலானது 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இந்த டிராக்டர் 70 முதல் 75 எச்பி இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், ஹைப்ரிட் மாடலாக வந்திருப்பதால், அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மூலமாக பல விதமான முறைகளில் இந்த டிராக்டரை இயக்க முடியும். டீசல் எஞ்சினில் மட்டுமே இயக்கவும், மின் மோட்டாரில் மட்டுமே இயக்கவும் முடியும். அதேபோன்று, டீசல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்தும் இயங்கும்.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

எஸ்கார்ட்ஸ் ஃபார்ம்டிராக் ஹைப்ரிட் டிராக்டர் தவிர்த்து, பேக்ஹூ என்ற அகழ்வு பணிகளுக்கான எந்திரத்தை இணைக்கும் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 50 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மின் மோட்டாருடன் இணையும்போது அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை அளிக்கும்.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

இதிலும், எஸ்கார்ட்ஸ் ஹைப்ரிட் டிராக்டர் போன்ற பல்வேறு டிரைவிங் மோடு தொழில்நுட்பம் இருந்தாலும், சிறிய வேறுபாட்டை பெற்றிருக்கிறது. இதன் டிராக்டர் மின் மோட்டாரில் மட்டுமே இயங்காது. ஆனால், இதில் இணைக்கப்பட்டு இருக்கும் எக்ஸ்கவேட்டர் எந்திரத்தை மின் மோட்டாரில் மட்டுமே இயக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

மூன்றாவதாக ரைடர் என்ற புதிய யுட்டிலிட்டி வாகனம் ஒன்றையும் எஸ்கார்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தில் 750 கிலோ வரை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாய்ப்பினை வழங்கும். இதில், 4 டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் டிராக்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ்!

தனது புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட டிராக்டர் மாடல்களை எஸ்க்ளூசிவ் என்ற பெயரிலான கண்காட்சி மூலமாக ஆண்டுதோறும் அறிமுகம் செய்து வருகிறது எஸ்கார்ட்ஸ். கடந்த ஆண்டு நடந்த எஸ்க்ளூசிவ் நிகழ்ச்சியில் டிரைவரில்லா டிராக்டரை அந்நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. தற்போது ஹைப்ரிட் டிராக்டர் மாடல்களை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Source: Motown India/YouTube

Most Read Articles
English summary
Escorts has showcased India's first hybrid tractor, hybrid backhoe loader and multi-utility backhoe loader. Escorts revealed the three new vehicles at Esclusive 2019 which is the company's annual innovation showcase platform.
Story first published: Tuesday, September 10, 2019, 14:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X