பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை மிக உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

இந்தியாவில் இயங்கும் புகழ்வாய்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், பெண்களால் மட்டுமே இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் தொழிற்சாலையை திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

இந்த தொழிற்சாலை ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நிறுவப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்க இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம், மேற்கொண்டிருக்கும் இதுபோன்ற நடவடிக்கையை வெறெந்த நிறுவனமும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

ஆட்டோ மொபைல் துறையில் பெண்களின் பங்கினை அதிகரிக்க வைக்கும் ஓர் முயற்சியாக அந்நிறுவனம் இதனை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து, பெண்களை அனைத்து துறையில் ஈடுபடுத்தும் விதமாக இதனை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு 'பிங்க் காலர்ஸ்' என்ற பெயரை அது வைத்துள்ளது.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

இதனை 9 பெண்களைக் கொண்ட குழுக்கள் கட்டுபடுத்தப்பட இருக்கின்றனர். மேலும், மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட இரு வழி திட்டத்தின் மூலம் இந்த சேவைகள் திட்டமிடப்பட்டு செய்யப்பட இருக்கின்றது. இதற்காக மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான கல்யாண் மோட்டார்ஸை அது பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றது.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

அந்தவகையில், புதிதாக மஹிந்திரா நிறுவனம் தொடங்க இருக்கும் இந்த தொழிற்சாலையில் சர்வீஸ் அட்வைசர் முதல் டிரைவர், மேனேஜர் மற்றும் காவலாளி என திரும்பிப் பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் பெண் பணியாளர்கள் மட்டுமே காட்சியளிப்பர். ஆகையால், இங்கு ஆண்களுக்கு துளியளவும் பணியிருக்காது.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

இதுகுறித்து, மஹிந்திரா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையின் மூத்த அதிகாரி வீஜே ராம் நக்ரா கூறியதாவது, "இந்தியாவின் முதல் பெண் பணியாளர் ஆட்டோ ஒர்க்சாப்பை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமைக் கொள்கின்றோம். இது முழுக்க முழுக்க பெண் பணியாளர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க இருக்கின்றது. ஆண்களுக்கு அங்கு இடமே இல்லை. பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும் ஓர் முயற்சியாக இதை நாங்கள் செய்துள்ளோம்" என்றார்.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

பெண்கள் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த சர்வீஸ் ஆலையில் செய்யப்படும் சேவைகளுக்கு 'காம்பேக்ட் க்விக்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை நிலையங்களுக்கு தேவையான பெண் பணியாளர்களை, மஹிந்திரா நிறுவனம் அதன் டீலர்கள் வாயிலாக பணியமர்த்த இருக்கின்றது.

பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...

இதற்காக தொழில்நுட்பம் மற்றும் பணி சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் சிறப்பு வகுப்புகள் மூலம் பெண்களுக்கு வழங்கவும் மஹிந்திரா திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான கட்டணமும் தள்ளுபடிச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொழிற்சாலையை திறப்பதற்கான அனைத்து பணிகளையும் அது நிறைவு செய்துவிட்டது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Indias First All Women-Run Automobile Service. Read In Tamil.
Story first published: Saturday, October 19, 2019, 18:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X