இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை தெரிந்தால் தலையே சுற்றும்...!

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதிய ரக வாகனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாகனத்தின் விலை என்னவென்று தெரிந்தால் நிச்சயமாக உங்களுக்கு தலை சுற்றலே ஏற்படும்.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இந்திய சாலைகளில் நாள்தோறும் பல்வேறு விதமான வாகனங்கள் பயணித்து வருகின்றன. அந்த வகையில், லாரி, டிரக், பஸ், கன்டெய்னர், கார், பைக், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நாட்டின் சாலையில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், இந்தியச் சாலைக்கு புதுமுக வாகனம் ஒன்று அறிமுகமாகி இருப்பது, தற்போதுதான் தெரியவந்துள்ளது.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இந்த மாடல் வாகனத்தை இந்திய சாலைகள், இதன் வருகைக்கு முன்னதாக கண்டிருக்காது என நம்பப்படுகிறது. அந்த வகையில், டிரைக் எனப்படும் வாகனம் அமைந்துள்ளது. இந்த புதிய ரக வாகனம், பார்ப்பதற்கு கார் மற்றும் பைக்கின் உறுவத்தை ஒத்தவாறு இருக்கும். ஆனால், இது பைக்கும் இல்லை, காரும் இல்லை.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இந்த ரகத்தில் இந்தியாவிற்கு வந்த முதல் வாகனமாக இதுதான் இருக்கிறது. ஆனால், இந்த டிரைக் ரக வாகனங்கள் ஆஃப்-ரோட் வாகனங்களாக மேலை நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கனடாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான கேன்-அம் நிறுவனம், ஆஃப்-பீட் ரக வாகனமான டிரைக் ரக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனத்தின் புகழ் வாய்ந்த மாடல் ஸ்பைடர்-டிரைக் வாகனம் தான் இந்திய சாலையில் காட்சிப்படுத்தப்படுள்ளது. இதுகுறித்த, வீடியோ காட்சியினை ஷாப்பி டோட்பிகா என்னும் இணையதளம் யுடியூப்-இல் பதிவிட்டுள்ளது.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த கேன்-அம் ஸ்பைடர் டிரைக் வாகனம் கடந்த 2013ம் ஆண்டே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விட்டது. இந்த வாகனத்தை வாங்கிய அதன் உரிமையாளர், டிரைக் வாகனத்தின் ஒரிஜினல் வண்ணத்தை மாற்றி தற்போது வேறொரு வண்ணத்தைக் கொடுத்துள்ளார். மேலும், இந்த டிரைக்கை அவர் அவ்வப்போது வாகன கண்காட்சிகளில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

அவ்வாறு, வாகனக் கண்காட்சியில் ஈடுபடுத்தும்போது, இந்த வாகனத்தைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுமாம். அதேபோன்று, இந்த வாகனம் சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்களைக் காட்டிலும் தனித்துவமாகக் காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டிரைக்கின் தோற்றமும், வண்ணமும் இருக்கிறது.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இந்த டிரைக்கை மும்பையைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர்தான் வாங்கியுள்ளார். ஆகையால், இந்த டிரைக் வாகனம் அவ்வப்போது மும்பையின் சாலையில் காட்சிக்குள்ளாகும் என கூறப்படுகிறது. அவ்வாறு, சாலையில் செல்லும்போதும் கூட இந்த வாகனத்தைச் சுற்றி சிலர் வந்துக்கொண்டே இருப்பார்கள் என வாகனத்தின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

பைக்குமல்லாத, காரும் அல்லாத உறுவத்தில் இருக்கும் இந்த டிரைக் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையில் சீட்களைப் பெற்றுள்ளன. சீட்டின் கீழே பொருட்களை வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இடைவெளியும் விடப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த டிரைக் பழைய மாடலாக இருந்தாலும், புதிய நவீன தொழில்நுட்பங்கள் இதில் சில இடம் பெற்றுள்ளன.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

அந்த வகையில், வேரியபிள் சஸ்பென்ஷன் ஸ்டிஃப்னஸ், ஹீடட்/கூல்ட் சீட்ஸ், எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் விண்ட்ஸ்கிரீன் மற்றும் மிகப்பெரிய முகப்பு மின்விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகனம் குறித்த பல்வேறு தகவல்கள் பெற முடியும்.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இதைத்தொடர்ந்து, இந்த வாகனத்தில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்பீக்கருடன் கூடிய எஃப்எம் ரேடியோ மற்றும் ஐபாட் கன்னெக்டிவிட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வாகனத்தில் சிறப்பான பவரை வெளிப்படுத்தும் விதமாக எலக்ட்ரானிக் ப்யூவல் மற்றும் எலக்ட்ரானிக் த்ரோட்டில் கன்ட்ரோலுடன் கூடிய 998சிசி கொண்ட, வி டிவின், லிக்யூடு-கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இது 100 பிஎச்பி பவரையும், 108 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த வாகனத்தில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஸன் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதியுடன் கூடிய கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகள் இதுவரை கண்டிராத புதுமுக வாகனம் இதுதான்... இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றும்..!

இந்த டிரைக்கை அதன் உரிமையாளர் 2013ம் ஆண்டு வாங்கிய போது, இந்திய மதிப்பில் ரூ. 16 லட்சம் செலுத்தியுள்ளார். அதனை இறக்குமதி செய்ய 150 சதவீத வரியுடன் ரூ. 45 லட்சம் செலுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, வாகன பதிவு உள்ளிட்ட பல்வேறு செலவீணங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த வாகனத்தின் தொகையானது, ரூ.50 லட்சமாக வந்துள்ளது. இது ஐந்து ஹோண்டா சிட்டி கார்களை வாங்குவதற்குச் சமம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indias First Can-Am Spyder Trike-Video. Read In tamil.
Story first published: Friday, April 12, 2019, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X