சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

சாதாரண சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற இந்தியாவின் முதல் ஏடிவி வாகனத்தை பவர்லேண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சாதாரண சாலைகளிலும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

மலைப்பாங்கான பகுதிகள், மணல் மற்றும் சேறு, சகதி நிறைந்த கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்களுடன் ஆல் டெரைன் வெஹிக்கிள் (ATV) வாகனங்கள் பயன்படுகின்றன. அதேநேரத்தில், இந்த வாகனங்களை சாதாரண சாலைகளில் இயக்குவதற்கு அனுமதியும் இல்லை. பதிவும் செய்ய முடியாது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

இந்தநிலையில், சாதாரண சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற இந்தியாவின் முதல் ஏடிவி வாகனத்தை பவர்லேண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பவர்லேண்டு 900D என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த ஏடிவி வாகனம் மும்பையில் பதிவு செய்யப்பட்டு சாதாரண சாலைகளில் இயக்கப்பட்டது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

இந்த பவர்லேண்டு 900D ஏடிவி வாகனத்தில் தனிநபர் பயன்பாட்டிற்கான வெள்ளை பதிவு எண் பலகை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது டிராக்டர் வகையில் விவசாய பயன்பாட்டு வாகனமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

இதன்மூலமாக, சாதாரண சாலைகளிலும் இதுபோன்ற ஏடிவி வாகனங்களை பயன்படுத்த விரும்பியோருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதனை ஓட்டுவதற்கு ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

இந்த ஏடிவி வாகனங்களுக்கான உதிரிபாகங்களை சீனாவிலிருந்து தருவித்து இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறது பவர்லேண்டு நிறுவனம். இந்திய மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் ஏடிவி வாகனங்களை விற்பனை செய்தாலும், பவர்லேண்டு நிறுவனத்தின் ஏடிவி வாகனங்கள் மிக சவாலான விலையில் கிடைக்கிறது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

பவர்லேண்டு 900D ஏடிவி வாகனத்தில் 800சிசி டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20 பிஎச்பி பவரையும்,, 48 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருப்பதுடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

இந்த ஏடிவி வாகனத்தில் 12 அங்குல ரிம்கள் இருப்பதுடன், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. மேடு பள்ளங்களை கடப்பதற்கு ஏதுவாக லாங் டிராவல் ஷாக் அப்சார்பர்களுடன் சஸ்பென்ஷன் உள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

இந்த ஏடிவி வாகனம் டிராக்டர் வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், இரண்டு பேர் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. பின்புறத்தில் டிரெயிலரை இழுத்துச் செல்வதற்கான கொக்கி அமைப்பும் உள்ளது. பொருட்களை வைத்து கட்டிச் செல்வதற்கான இரண்டு கேரியர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஏடிவி வாகனத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் வெளியாகி இருக்கும் வீடியோவில் விலை குறித்த விபரம் இல்லை. எனினும், ரூ.4 லட்சத்திலும், ஆன்ரோடு விலை ரூ.4.4 லட்சம் விலையை ஒட்டியதாக இருக்கும் என்றும் தெரிகிறது.

சாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்!

அண்மையில் மும்பை போலீசாருக்கு ஏடிவி வாகனங்களை பவர்லேண்டு வழங்கியது. இந்த வாகனங்கள் ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த கும்ப மேளாவின் கண்காணிப்புப் பணியிலும் பவர்லேண்டு 900D ஏடிவி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Horsepower Cartel

Most Read Articles
English summary
India’s first road-legal Powerland 900D ATV Details.
Story first published: Monday, March 18, 2019, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X