இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இந்தியாவில் இந்த விபரீதங்கள் நடக்கலாம் என அபாய சங்கு ஊதப்படுவதால், நாட்டு மக்களை பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80க்கும் மேற்பட்ட சதவீதத்தை இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை அதிகம் வழங்கி வரும் நாடுகளின் பட்டியலில் ஈராக் முதல் இடத்திலும், சவுதி அரேபியா 2வது இடத்திலும் உள்ளன. இந்த வரிசையில் ஈரான் 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 10 சதவீதத்தை ஈரான்தான் பூர்த்தி செய்கிறது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் 2வது நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில், ஈரானில் இருந்து 22.6 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி (ஒரு நாளைக்கு 4,52,000 பேரல்கள்) செய்திருந்தது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

ஆனால் இதனை ஒரு மாதத்திற்கு 1.25 மில்லியன் டன் அல்லது ஒரு ஆண்டுக்கு 15 மில்லியன் டன்களாக (ஒரு நாளைக்கு 3,00,000 லட்சம் பேரல்கள்) குறைத்து கொள்கிறோம் என அமெரிக்காவிடம், இந்தியா சமீபத்தில் ஒப்புக்கொண்டிருந்தது. அமெரிக்கா-ஈரான் இடையேயான ஒரு பிரச்னைதான் இதற்கு காரணம்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அமெரிக்கா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் ஈரான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த அமெரிக்கா, அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் விலகியது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அதன்பின் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து, ஈரானை விலக்கி வைக்கும் முயற்சிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இதில், இந்தியாவும் அடங்கும். ஆனால் இதற்காக உலக நாடுகளுக்கு அமெரிக்கா கால அவகாசம் கொடுத்தது. அதாவது 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வரை ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்தது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

ஆனால் அதன்பின் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறும் நாடுகளின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பயமுறுத்தியது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அந்த சமயத்தில் இந்த விவகாரம் உலகம் முழுக்க பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட சூழலில், எதிர்பார்த்தபடியே 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியும் வந்தது. ஆனால் அப்போது அமெரிக்கா தனது உத்தரவை அமல்படுத்தவில்லை.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அதற்கு பதிலாக கால அவகாசத்தை மேலும் நீட்டித்தது. ஆனால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்த கூடுதல் கால அவகாசமும் 8 நாடுகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இந்தியா, சீனா, கிரீஸ், இத்தாலி, தைவான், ஜப்பான், துருக்கி மற்றும் தென் கொரியா ஆகியவைதான் அந்த 8 நாடுகள். அதுவும் மேற்கண்ட 8 நாடுகளுக்கும், 6 மாத கால அவகாசத்தை மட்டுமே அமெரிக்கா வழங்கியது. இந்த தற்காலிக கால அவகாசமும் கடந்த மே 2ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இனி எந்தவொரு நாட்டிற்கும் சலுகை காட்ட முடியாது என அமெரிக்கா உறுதியாக கூறி விட்டது. இதனால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் உத்தரவை மீறினால், பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அதே நேரத்தில் அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கும் வகையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டால், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அமெரிக்காவின் இந்த உத்தரவால் இந்தியா கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அமெரிக்காவின் உறுதியான முடிவு வெளிவந்த உடனேயே, சர்வதேச சந்தையில் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கி விட்டது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

ஆனால் அதன் தாக்கம் இந்தியாவில் இன்னும் எதிரொலிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என ஆளும் பாஜக கருதுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

எனவே தேர்தல் முடிவடைந்த பின் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்படலாம் என சமீபத்தில் வெளியான தகவல்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை பாஜகவிற்கானது மட்டும் அல்ல.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

புதிதாக அமையவுள்ள அரசு எதுவாயினும் அவர்களுக்கான முதல் சவால், கச்சா எண்ணெய் விவகாரத்தை கையாள்வதாகதான் இருக்கும். சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்திய ரூபாய் மதிப்பு சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இதன் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும், பண வீக்கம் அதிகரிக்கும், பட்ஜெட்டில் துண்டு விழும் என பொருளாதார வல்லுனர்கள் வரிசையாக அபாய சங்கு ஊதி கொண்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா இதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இதுகுறித்து ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா (Harsh Vardhan Shringla) கூறுகையில், ''அமெரிக்காவிற்கு, ஈரான் உடன் பிரச்னைகள் உள்ளது என்பதை இந்தியா புரிந்து கொள்கிறது. ஆனால் அமெரிக்காவின் முடிவால், எண்ணெய் விலை உயர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அத்துடன் பண வீக்கமும் அதிகரிக்கலாம். இது இந்தியாவில் உள்ள சமானிய மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்'' என்றார். அமெரிக்காவின் முடிவு இந்தியாவில் நேரடி தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அதே நேரத்தில் ஈரான் கச்சா எண்ணெய் இழப்பை ஈடுகட்டும் விதமாக, மற்ற முக்கியமான எண்ணெய் வளம் மிக்க நாடுகளிடம் இருந்து, இந்தியா கூடுதல் சப்ளையை பெறும் என இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

இந்த சூழலில் அமெரிக்காவின் முடிவால் ஏற்படவுள்ள தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராகி விட்டது என வெளியுறவு துறை அமைச்சக அதிகாரி ராவிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக ராவிஷ் குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அப்போது அவர் கூறுகையில், ''இந்த விவகாரத்தில் நமது பெட்ரோலிய துறை அமைச்சகம் வலுவான ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில், எண்ணெய் உற்பத்தி செய்யும் மற்ற முக்கியமான நாடுகளிடம் இருந்து கூடுதல் சப்ளை கிடைக்கும்'' என்றார்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

அப்படியானால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளுக்கு இந்தியா இசைந்து கொடுக்கிறதா? இதற்காக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ''ஜீரோ'' என்ற நிலைக்கு இந்தியா கொண்டு வருகிறதா? என்று அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

ஆனால் இந்த கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் எதையும் ராவிஷ் குமார் கொடுக்கவில்லை இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் வழங்குவது கடினம் என அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விவகாரம் இந்தியாவின் பொருளாதாரத்தை உலுக்குவதுடன், வாகன ஓட்டிகளின் பர்ஸையும் பதம் பார்க்கும்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

சென்னையில் இன்றைய (மே 4) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75.93 ரூபாய். அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 70.49 ரூபாய். இதுவே அதிகமான விலைதான் என வாகன ஓட்டிகள் கருதி கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த விபரீதம் நடக்கும்... அபாய சங்கு ஊதுவதால் நாட்டு மக்களை தொற்றிக்கொண்ட பதற்றம்...

நிலைமை இப்படி இருக்க, தேர்தல் முடிந்த பிறகு என்ன நடக்குமோ? என்ற அச்சத்தை வாகன ஓட்டிகளின் முகத்தில் காண முடிகிறது. ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
India Prepared To Deal With US Sanctions On Iran Oil Imports, Says External Affairs Ministry Spokesperson. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X