ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

ஆஃப்ரோடு பிரியர்களை கவர்ந்திழுக்கும் வகையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் இதர விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் தனி நபர் மார்க்கெட்டை குறிவைத்து விற்பனை செய்யப்படும் பிக்கப் டிரக் மாடல்களில் இசுஸு வி க்ராஸ் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குரிய மாடலாக வலம் வருகிறது. குறிப்பாக, ஆஃப்ரோடு சாகச பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் பல்வேறு அம்சங்களுடன், பிரிமீயம் ரக பிக்கப் டிரக் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை தக்க வைக்கும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூபி ரெட், டைட்டானியம் சில்வர், ஆப்சிடியன் க்ரே, காஸ்மிக் பிளாக் மற்றும் ஸ்ப்ளாஷ் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைத்து வந்த நிலையில், தற்போது சஃபையர் புளூ மற்றும் சில்க்கி பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளிலும் வந்துள்ளது.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் பை - எல்இடி ஹெட்லைட்டுகள், க்ரோம் அலங்காரத்துடன் கூடிய பனி விளக்குகள் அறை, 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், வலிமையான வீல் ஆர்ச்சுகள் ஆகியவை மாற்றங்களுடன் வசீகரிக்கின்றன. ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா, சைடு ஸ்டெப்புகள், கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பி பில்லர், எல்இடி டெயில் லைட்டுகள் என அசத்துகிறது.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகளின் தரம் உயர்ந்துள்ளது. பயணிகளின் சொகுசு அம்சங்கள் மேம்பட்டுள்ளன. முப்பரிமாண தோற்றத்திலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த வாகனத்தின் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஆடியோ சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எளிதாக ஏறி இறங்கும் வகையில், இருக்கையை எளிதாக மடக்கி நகர்த்துவதற்கான வசதியும் உள்ளது.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த வாகனத்தில் முன்புற மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், லோடு லிமிட்டர் மற்றும் ப்ரீ டென்சனர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு டி-மேக்ஸ் வி க்ராஸ் வாகனத்தில் முக்கிய அம்சமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 134 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது..

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் 5 பேர் பயணிப்பதற்கான இரண்டு வரிசை இருக்கை அமைப்புடைய கேபினும், பின்புறத்தில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான பெட் அமைப்பும் உள்ளது. ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மிக வலிமையான சஸ்பென்ஷன் அமைப்பும், சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இதற்கு வலு சேர்க்கின்றன.

ஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ஹை வேரியண்ட் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.15.51 லட்சம் விலையும், ஹை வேரியண்ட்டிற்கு ரூ.17.03 லட்சம் விலையிலும் வந்துள்ளன. பழைய விலையிலேயே இந்த புதிய மாடல் விற்பனை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu has launched the D-MAX V-Cross facelift model with 20 new advancements making it a standout performer on or off-road.
Story first published: Thursday, June 20, 2019, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X