ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களிலிருந்து பேட்டரியில் இயங்கும் கார் மாடல்கள் பக்கம் இருந்து வரும் தனது வர்த்தகத்தை மின்சார கார் மாடல்கள் பக்கம் திசை திருப்ப இருக்கிறது ஜாகுவார் லேண்ட்ரோவர் கூட்டணி நிறுவனம். இதற்கான திட்டங்கள் குறித்த செய்திக் குறிப்பை இன்று அனுப்பி இருக்கிறது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

அதில், ஹைப்ரிட் மற்றும் மின்சார கார் மாடல்கள் அறிமுகம் குறித்த தெளிவான திட்டங்களை கூறி இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதியில் ஹைப்ரிட் கார் மாடல்களை களமிறக்கவும், அடுத்த ஆண்டு ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்து சொல்லிவிட்டாலும், ஹைப்ரிட் மாடல் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

மேலும், ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாடல்கள் 6 சதவீதம் அளவுக்கு கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழஹ்க வல்லதாக இருக்கும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஜாகுவார் ஐ-பேஸ் எஸ்யூவி ரக கார்தான் ஜாகுவார்-லேண்ட்ரோவர் கூட்டணி நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மின்சார கார் மாடலாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்த ஐ-பேஸ் மின்சார காரின் இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் பொாருத்தப்பட்டு இருக்கும். இந்த இரண்டு மின் மோட்டார்களின் சக்தியும் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படும். இது ஆல் வீல் டிரைவ் மாடலாகவும் வர இருக்கிறது.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் இருக்கும் மின்மோட்டார்கள் அதிகபட்சமாக 400 எச்பி பவரையும், 695 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன்மூலமாக, இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும்.

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காருக்கு கொடுக்கப்படும் 50kW சார்ஜர் மூலமாக ஒன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால் 125 கிமீ தூரம் பயணிக்க முடியும். இதில் இருக்கும் 90 kWh லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் பயணிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover India has announced to begin its electrification journey in 2019.
Story first published: Tuesday, April 2, 2019, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X