ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

ஜாகுவார் எக்ஸ்இ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

ஜாகுவார் நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு செடான் கார் மாடலாக எக்ஸ்இ விற்பனையில் உள்ளது. ஜாகுவார் கனவுடன் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கார் கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

இந்த புதிய மாடல் வரும் டிசம்பர் 4ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

ஜாகுவார் எக்ஸ்இ காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். புதிய பம்பர் அமைப்பு உள்ளிட்ட சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

உட்புறத்தில் டேஷ்போர்டு அமைப்பு முற்றிலும் மாறுபட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பெரிய தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கு தனி தொடுதிரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

இந்த காரின் உட்புறத்தில் இருக்கும் பாகங்களின் தரமும் மேம்படுத்தப்பட்டு இருப்பதால் அதிக பிரிமீயம் மாடலாக காட்சி அளிக்கிறது. மேலும், தற்போதைய மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட உணர்வை வழங்கும் விதத்தில் இன்டீரியர் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 250 எச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 180 எச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்!

புதிய ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் வாய்ப்புள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் மற்றும் ஆடி ஏ4 கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஜாகுவார் எக்ஸ்இ கார் போட்டியாளர்களுக்கு கடும் சந்தைப் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar has revealed that the XE facelift model will be launched in India on December 4, 2019.
Story first published: Friday, November 8, 2019, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X