உலகின் அதிவேகமான ஜேசிபி இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

உலகின் அதிவேகமான ஜேசிபி எந்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது காரை தோற்கடிக்கும் வேகத்தில் இயக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

ஜே.சி. பம்ஃபோர்ட் எக்ஸ்கேவடர்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள், உலகம் முழுவதிலும் ஜேசிபி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் வாகனம்குறித்த வீடியோ ஒன்று அண்மையில் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியிருந்தது. இதற்கு, அந்த வீடியோவை பல லட்சம் பார்வையிட்டதே அதற்கு காரணம். அந்த வீடியோவில், ஒரு கட்டுமான தளத்தையை அது தோண்டி எடுக்கும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

இந்நிலையில், மீண்டும் ஒரு ஜேசிபி குறித்த வீடியோ ஒன்று வெளியாகி, வைரலாகி வருகின்றது. அதேசமயம், இந்த ஜேசிபி எந்திரம் உலக சாதனையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், ஜேசிபி எந்திரம் காற்றைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்து செல்லும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

அதில், ஜேசிபி எந்திரம் மணிக்கு 166கிமீ தூரம் என்ற வேகத்தைத் தொட்டு சாதனைப் படைத்துள்ளது. இதன்காரணமாக, வாகன உலகின் தலைப்பு செய்தியாக இந்த ஜேசிபி எந்திரம் மாறியுள்ளது. இந்த புதிய சாதனையை இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் என்ற இளைஞர்தான் செய்துள்ளார்.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சாகசங்கள் ஜேசிபி டிராக்டர் எந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாதனையில் வெறும் 144 கிமீ என்ற வேகம் மட்டுமே தொடப்பட்டது. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் சாதனையோ மணிக்கு 166 கிமீ வேகமாகும். இந்த சாதனையை, முன்னால் ராணுவ தளவாடமான ராயல் ஏர் போர்ஸுக்கு சொந்தமான விமான ஓடுதளத்தில் அந்த இளைஞர் நிகழ்த்தியுள்ளார். இது இங்கிலாந்தின் லீஸ்செஸ்டெர்ஷைர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

இதனை நிகழ்த்திய மார்ட்டின் என்பவர், இருசக்கர வகான ஓட்டபந்தயத்தின் ஜாம்பவான் என கூறப்படுகின்றது. இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இந்த சாதனையானது சேனல்4 நிறுவனத்தின் ஆவணப்படத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இதுதான் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

அதேசமயம், சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த சாதனை குறித்த முழு வீடியோவை தற்போதுவரை வெளியிடவில்லை. மேலும், இதனை வரும் காலங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், டீசர் போன்ற காட்சி மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சாதனைக் குறித்து மார்ட்டின் கூறியதாவது, "ஜேசிபி எந்திரத்தில் செய்யப்பட்ட இந்த சாகசம் மிகச்சிறப்பான ஒன்று. இந்த வெற்றியை மிகச்சிறந்த பொறியாளர்களின் உதவியாலே பெற முடிந்தது. இதனாலேயே ஜேசிபி ஓடுபாதையிலி் மிகச் சிறப்பாக சீறிப்பாய்ந்தது" என்றார்.

மார்டின் இயக்கிய ஜேசிபி எந்திரத்தில் 7.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1,000 பிஎச்பி பவரையும், 2,500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், இந்த வாகனத்தை 166 கிமீ வேகத்தைத் தொடுவதற்கு ஏதுவாக, யார் அதனை ட்யூன்-அப் செய்தது என்ற தகவல் வெளியடப்படவில்லை. ஆனால், வில்லியம்ஸ் அட்வான்ஸ்ட் இஞ்ஜினியரிங் குழு இதனை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த குழுதான் ஃபார்முலா 1 திட்டத்தை மேற்கொண்டார்கள்.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

இந்த சாதனையைப் படைத்த மார்டின் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஆரம்பத்தில், அவரது பணியை லாரி மெக்கானிக்காக தொடங்கியுள்ளார். இதன் பின்னர், பந்தயத்தில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக மோட்டார்சைக்கிள் ரேஸில் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வாறு, கடந்த 1998ம் ஆண்டு முதல் பைக் ரேஸில் பங்கேற்றுள்ளார். மேலும், இவர் இதுவரை நான்கு கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

உலகின் அதிவேகமான ஜேசிபி டிராக்டர் இதுதான்... காரை மிஞ்சும் வேகத்தில் சென்று புதிய சாதனை படைப்பு!!!

ஜேசிபி எந்திரம் என்றாலே தூர் வாரவும், கட்டிடங்களை இடிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற பார்வையை மாற்றும் விதமாக தற்போதைய சாதனை உள்ளது. இதுமட்டுமின்றி முன்னதாக ஜேசிபி எந்திரம் மூலம் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த சாதனையானது, உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

Most Read Articles
English summary
166kmph Makes This 1000Bhp JCB Tractor Fastest In The World — Guy Martin Suits Up. Read In Tamil.
Story first published: Friday, June 28, 2019, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X