விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அனைவரின் கனவு மாடலாக ஜீப் காம்பஸ் விளங்குகிறது. அசத்தலான டிசைன், பாரம்பரியம், சரியான விலை போன்றவை இந்த எஸ்யூவியை சிறந்த தேர்வாக வைத்திருக்கிறது. இந்த நிலையில், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற புதிய வரவுகளால் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் முயற்சியாக டீசல் மாடலில் விலை குறைவான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அண்மையில், முழுமையான ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ட்ரெயில்ஹாக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த வேரியண்ட் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் பட்ஜெட்டில்தான் கிடைக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளை வரும் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் தெரிவிக்கிறது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டில் இருக்கும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விலை அதிகமானது. எனவே, விலையை குறைவாக நிர்ணயிக்கும் நோக்கில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டீசல் வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த 9 ஸ்பீடு ஆட்டோமேட்டி கியர்பாக்ஸ் தேர்வை வழங்க ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த புதிய டீசல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் என்று ஜீப் நிறுவனம் நம்புகிறது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த நிலையில், வரும் ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்கள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. எனவே, ஜீப் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலின் ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டில் மட்டும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை லிமிடேட் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்டில் வழங்குவதை தவிர்க்கவும் ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இல்லையெனில், அது ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டிற்கு நிகராக விலை நிர்ணயிக்க வேண்டி இருக்கும் என்பதால், விலை குறைவான வேரியண்ட்டுகளில் மட்டுமே டீசல் ஆட்டோமேட்டிக் தேர்வு வழங்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
According to reports, Jeep Compass diesel model will get 9 speed automatic gearbox option in lower variants in India soon.
Story first published: Tuesday, July 23, 2019, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X