ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

ஆஃப் ரோடு வாகன பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் நிறுவனத்தின் புதிய மாடலின் விற்பனைக் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

ஜீப் காம்பஸ் நிறுவனம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி மாடல் காருக்கான புக்கிங்கை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல் எஸ்யூவி சாதரண மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக இருக்கின்றது.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

அதற்கேற்ப இந்த மாடலில் ஏரளமான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் ஆக்டிவ் டிரைவ் லோ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு வீல்களுக்கும் இயங்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரியர் லாக்கிங் டிஃபரன்ஷியல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்துவதற்கான ராக் டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

தொடர்ந்து, ட்ரெயில்ஹாக் மாடலுக்கு 225 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவி-யைவிட மாடலைக் காட்டிலும் 20 மிமீ அதிகமாகும். ஆகையால், இந்த புதிய ட்ரெயில்ஹாக், ஆஃப்ரோடு சாலைகளான மலைப் பாதை, செங்குத்தான நிலப்பரப்பு, சரிவான பாதைகள் ஆகியவற்றில் சிறப்பாக பயணிக்கும். அதற்கேற்ப அதன் பம்பர்களும் வலுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

இதேபோன்று, நீர் நிலைகளை எளிதாக கடக்கும் வகையில், ஏர் இன்டேக் பகுதி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ட்ரெயில்ஹாக் 480 மிமீ ஆழத்தில் சென்றாலும், தண்ணீர் காருக்குள் வராது. அதேசமயம் வாகனத்தின் அடிப்பகுதியில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

ஜீப் காம்பஸின் இந்த புத்தம் புதிய வேரியண்டை மிகவும் கவர்ச்சியாக காட்டும் வகையில், மிகவும் தூக்கலான வண்ணக் கலவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நீளம்-கருப்பு, சிவப்பு-கருப்பு உள்ளிட்ட வண்ணக் கலவைகள் ஜீப் காம்பஸின் ட்ரெயில்ஹாக் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

இதைத்தொடர்ந்து, முதல் முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இந்த எஸ்யூவில் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது யூரோ-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டதாகும். இது பிஎஸ்-6 மாசு உமிழ்விற்கு நிகரானது.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

இத்தனை சிறப்புகளுடைய இந்த ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக், ஆஃப் ரோடு வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில், தற்போது இந்த மாடலுக்கான புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன!

ஜீப் காம்பஸ் ட்ரெயிஸ்ஹாக் எஸ்யூவி மாடலை வருகின்ற ஜீலை மாதத்திற்குள், இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக ஜீப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான புக்கிங் வருகின்ற ஜீன் மாதம் மத்தியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதன் ரசிர்களின் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Trailhawk Booking Open On June. Read In Tamil.
Story first published: Wednesday, April 24, 2019, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X