புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் காம்பஸ் இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், முழுமையான ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் கூடிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக வந்திருக்கும் இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் மிக முக்கிய அம்சமாக, பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட தரமுடைய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபியட் நிறுவனத்திடம் இருந்து சப்ளைய பெறப்படும் இந்த எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

இந்த எஞ்சினுடன் இசட்எஃப் நிறுவனத்தின் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவியில் ஜீப் ஆக்டிவ் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் 17 அங்குல விட்டமுடைய டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பானட்டில் எதிரொலிப்பு இல்லாத பாடி டீக்கெல் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புற 7 தடுப்புகள் கொண்ட க்ரில் அமைப்பு கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் ட்ரெயிலில் ஓட்டுவதற்கான வாகனம் என்பதை குறிக்கும் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல முழுமையான மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சேட்டிலைட் நேவிகேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு வண்ண அலங்கார ஆக்சஸெரீகள் வசீகரிக்கின்றன. இந்த காரில் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

ஆஃப்ரோடு பயணங்களை பாதுகாப்பாக இருக்கும் விதத்தில், 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் லாக்கிங் டிஃபரன்ஷியல் மற்றும் டெரெயின் செலக்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் கேமரா, கார்னரிங் பனி விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட புதிய ட்ரெயில்ஹாக் மாடலானது 20 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எஸ்யூவியின் அடிப்புறத்தில் பேஷ் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஆஃப்ரோடு பயணங்களின்போது காரின் அடிப்பாகத்தில் சேதம் அடைவது தவிர்க்க முடியும்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்: முழு விபரம்

சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவியானது ரூ.15.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.23.11 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆனால், புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவிக்கு ரூ.26.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has launched the off-road focused Compass TrailHawk SUV in India.
Story first published: Tuesday, June 25, 2019, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X