ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ட்ரெயில்ஹாக் மாடலின் சோதனை முறையிலான உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தையும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டது. இந்த சூழலில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் விரைவில் இந்தியா அறிமுகமாக இருக்கிறது.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

இந்த புதிய ஆஃப்ரோடு மாடல் ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் என்ற பெயரில் வர இருக்கிறது. இதுகுறித்து அண்மையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

இதனால், மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது. சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இருந்து ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் ஆஃப்ரோடு மாடல் பல வேறுபாடுகளுடன் வர இருக்கிறது. குறிப்பாக, வெளிப்பபுறத்தில் கவர்ச்சிகமான பல ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் தக்கவைக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால் முக்கிய மாற்றமாக, 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டெர்ரெயின் செலக்ட் ஆப்ஷனுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி சாதாரண மாடலைவிட 20 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். அதாவது, 225 மிமீ வீல்பேஸ் நீளம் பெற்றிருக்கும். அதேபோன்று, ஏர் இன்டேக் அமைப்பும் சற்று உயர்த்தப்பட்டதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

இதனால், 480 மிமீ ஆழம் வரை நீர்நிலைகளில் செலுத்த முடியும். காருக்கு அடியில் விசேஷ ஸ்கிட் பிளேட் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருப்பதோடு, விசேஷ ஆல் சீசன் டயர்களும் இடம்பெற்றிருக்கும்.

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

ரஞ்சன்கவுன் பகுதியில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கார் ஆலையில் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹைாக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதோடு, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

Source: TeamBHP

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Fiat-Chrysler Automobiles has started a trial production of the India-spec Jeep Compass Trialhawk. The SUV is being manufactured at the Fiat-Chrysler Automobiles facilty at Ranjangaon near Pune.
Story first published: Monday, April 22, 2019, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X