பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு போட்டியாக புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் அறிமுகம் குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக உள்ளது. குறிப்பாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்படும் காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என பல சிறந்த மாடல்கள் இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் இந்த சந்தைக்காக புத்தம் புதிய எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த புதிய மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஜீப் இந்தியா நிறுவனம் பங்கேற்கவில்லை. எனவே, இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும். ஜீப் நிறுவனத்தின் புகழ்பெற்ற ரெனிகேட் எஸ்யூவியின் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவியானது சாதாரண சாலைகளுக்கான மாடலாகவும், ட்ரெயில்ஹாக் என்ற விசேஷ ஆஃப்ரோடு வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. எஸ்யூவி பிரியர்களுக்கு இந்த புதிய ஜீப் எஸ்யூவி வருகை பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

இந்த புதிய மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் குறைவான விலை வேரியணட்டுகளில் வழங்கப்படலாம்.

பிரெஸ்ஸா, வெனியூ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

புதிய ஜீப் காம்பேக்ட் எஸ்யூவி ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜீப் காம்பஸ் எஸ்யூவியை போன்றே இந்திய எஸ்யூவி பிரியர்களை வெகுவாக கவரும். ஜீப் நிறுவனத்தின் அரக்கத்தனமான டிசைன் அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும்.

Source: Business Standard

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep is planning to launche all new compact SUV in India by next year.
Story first published: Friday, October 25, 2019, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X