இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பார்க்கும் ஏஎன்சிஏபி அமைப்பு, அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான ஜீப் ரேங்லர் காரை க்ராஷ் டெஸ்ட் செய்து பார்த்தது. இதில் கிடைத்த முடிவுகள் அதன் ரசிகர்கள் உட்பட பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் வெளிவந்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

2019ம் ஆண்டிற்கான ஜீப் ரேங்லர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இந்தியாவிலும் களமிறங்கும் வகையில் அவ்வப்போது சாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

இந்நிலையில், இந்த காரை ஏஎன்சிஏபி என்னும் அமைப்பு, சமீபத்தில் க்ராஷ் டெஸ்ட் (மோதி பரிசோதனை செய்தல்) செய்து பார்த்தது. இந்த பரிசோதனையில், ஜீப் ரேங்லர் வெறும் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றிருக்கின்றது.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

ஏஎன்சிஏபி அமைப்பின் இந்த பரிசோதனையானது, காரின் பாதுகாப்பு குறித்த அறிந்து கொள்வதற்கு நடத்தப்படுகிறது.

இதில், ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றால் மட்டுமே அந்த கார் அதிகம் பாதுகாப்பு கொண்ட என சர்டிபிகேட் பெற முடியும். இது அதன் விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு உதவியாக இருக்கும். மேலும், பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படும்.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

இந்நிலையில், இந்த புதிய ஜீப் ரேங்லர் வெறும் ஒரு நட்சத்திரத்தைப் பெற்றிருப்பது அதன் ரசிகர்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஏஎன்சிஏபி அமைப்பின் சிஇஓ ஜேம்ஸ் காட்வின் கூறியதாவது, "ரேங்லரின் இந்த ரிசல்ட் வேதனையளிக்கும் விதத்தில் கிடைத்துள்ளது. நாங்கள் இந்த மாடலில் குறைந்தது 3 நட்சத்திரங்களையாவது எதிர்பார்த்தோம். ஆனால் வெறும் 1 ஸ்டாரை மட்டுமே பெற்றிருக்கின்றது" என்று வேதனை தெரிவித்தார்.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

ஜீப் ரேங்லர் இதற்கு முன்னதாக யூரோ என்சிஏபி அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்டிலும் வெறும் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றிருந்தது. ஆகையால், இந்த ரேங்லர் சற்று மேம்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரையும் ஏமாற்றும் வகையில், அந்த கார் மீண்டும் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே பெற்றிருக்கின்றது.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

இந்த க்ராஷ் டெஸ்டில், ரேங்லரின் நான்கு கதவுகள் கொண்ட வேரியண்ட்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரேங்லர் மாடலில் மற்றுமொரு வேரியண்டாக ட்யூவல் டூர் வசதி கொண்ட ரேங்லர் இருக்கின்றது. இதையும் அந்த நிறுவனம், நான்கு கதவுகள் கொண்ட ரேங்லரின் அதே தொழில்நுட்பத்தில்தான் உருவாக்கியுள்ளது. ஆகையால், இந்த க்ராஷ் டெஸ்டில் 2 டூர் வேரியண்டை உட்படுத்தியிருந்தாலும், இதே ரிசல்ட் கிடைத்திருக்கும்.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

ரேங்லரின் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பக்கவாட்டு பகுதியிலும் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், முன்னிருக்கையில் அமர்பவர்களுக்காக மார்பக பகுதி மற்றும் தலையின் பாதுகாப்பிற்காக ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

அதேசமயம், இந்த காரில் பின்பக்கத்தில் அமர்பவர்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பின்னிருக்கையில் அமர்பவர்களுக்கு பக்கவாட்டு பகுதியில் தலையைக் காப்பதற்கான ஏர் பேக்குகள் பொருத்தப்படவில்லை. அதேபோன்று, இந்த காரின் பாஸஞ்சர் பகுதியிலும் ஒழுங்கான கட்டுமான முறையைப் செய்யப்படவில்லை என்ற தகவல் இந்த க்ராஷ் டெஸ்ட்டின் முடிவின்மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த கார்ல போனீங்கனா பரலோகம் நிச்சயம்... முழு தகவல் உள்ளே...!

மேலும், இந்த காரின் டேஷ்போர்டு காரின் ஓட்டுநர் மற்றும் முன்பக்க பயணியின் உடல் மற்றும் கால்களை உள்ளிட்ட சில பகுதிகளை பாதிக்கும் வகையில் இருக்கின்றது. அதேபோன்று, பின்னிருக்கையில் அமர்பவர்களின் கழுத்து மற்றும் மார்பக பகுதிக்கும் பாதுகாப்பு மிக குறைவாகவே இருக்கின்றது.

அதேசமயம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பார்த்தோமேயானால், 6 வயது வரையுள்ள குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பானதாக இருக்கின்றது. ஆனால், 10 வயது குழந்தைகளுக்கு சற்று குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது. மேலும், பாதசாரிகள் பாதுகாப்பிற்கும் இது குந்தகம் விளைவிக்கும் இருக்கின்றது. இதனால், இந்த 2019 ரேங்லர் காருக்கு 1 ஸ்டார் மதிப்பெண் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Wrangler Gets 1 Star In ANCAP Crash Test. Read In Tamil.
Story first published: Tuesday, May 28, 2019, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X