ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி மாடலை அந்த நிறுவனம் இந்தியாவில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த சோதனையின்போது, எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

பொதுவாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் புதிய தயாரிப்புகள் மீது அதீத எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதற்காக, வாகனங்கள் குறித்த முக்கிய தகவல்களை ரகசியம் காத்து, அறிமுகத்தின் வெளியிடுவார்கள். மேலும், புதிய வாகனத்தின் மீது ஆவலைத் தூண்டும் வகையில் சிறிது சிறிதாக வாகனம் குறித்த புகைப்படம் அல்லது டீசரினை வெளியிடுவார்கள்.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

இத்துடன், பரிசோதனை மேற்கொள்ளும்போது, வாகனத்தின் மீது கேமோ எனப்படும் ஸ்டிக்கரை சாலையில் பயணிப்பார்கள். இவ்வாறு, புதிய மாடல் வாகனம் குறித்து எந்தவொரு தகவலும் கசியாதவாறு கட்டிகாப்பார்கள்.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

இவ்வாறு, அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட, இவை அனைத்திற்கும் மாற்றாக ஜீப் நிறுவனம் அதன் விராங்க்ளர் (ஜேஎல்) மாடலை எந்தவொரு ஒளிவும் மறைவுமின்றி இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனைச் செய்தள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை ஓவர் டிரைவ்.இன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கும் இந்த புதிய ஜீப் ரேங்லர், 2 கதவுகள் கொண்ட புதிய தலைமுறை மாடலாகும்.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

இந்த நான்காம் தலைமுறை ஜீப் விராங்க்ளர் பார்ப்பதற்கு புதிய பரிணாமம் கொண்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த புதிய பரிணாம தோற்றமானது, விராங்க்ளருக்கு மாடர்ன் மற்றும் கிளாசியான தீமை வழங்குகிறது. இத்துடன், இந்த ஜீப் வ்ராங்க்ளரின் முன் பக்கத்தில் வட்டவடிவிலான முகப்பு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு அறைக் கொண்ட கிரில் அமைப்பு, தடினமான வீல், எக்ஸ்போஸ்ட் டோர் ஹிங்க்ஸ் மற்றும் ஃபோல்டபில் விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்டவை பிரத்யேமாக பொருத்தப்பட்டுள்ளன.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

இவற்றுடன், தொழில்நுட்ப வசதிகளாக 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7இன்ச் கொண்ட டிஎஃப்டி எல்இடி டிரைவர் இன்ஃபெர்மேஷன் டிஸ்பிளே, 12v அக்செஸ்சரி அவுட்லெட்ஸ், 230v ஏசி அவுட்லெட், எஞ்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் அட்ஜெஸ்டபிள் சீட் போல்ஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

இந்த புதிய தலைமுறை ஜீப் விராங்க்ளர் இரண்டு விதமான எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது. அவ்வாறு, 2.2 லிட்டர் மல்டிஜெட் II டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் விராங்க்ளர், 200 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

அதேபோன்று, 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் விராங்க்ளர் 272 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இந்த இரண்டு எஞ்ஜின்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஐடில் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

இதேபோன்று, இந்த விராங்க்ளர் மூன்றாவது ஆப்ஷனில் கிடைக்கின்றது. இதில், 3.6 லிட்டர் பென்டேஸ்டர் நேட்சுரல்லி-அஸ்பைரேடட் பெட்ரோல் மில் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 284 பிஎஸ் பவரையும் 347 என் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஒளிவு மறைவுமின்றி இந்திய சாலைக்கு வந்த ஜீப் ரேங்லர்!

ஆஃப் ரோடு பயணத்தைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி விராங்க்ளர் இரண்டு 4x4 ஆப்ஷனில் கிடைக்கின்றது. இதன் முந்தைய தலைமுறை விராங்க்ளர் இந்திய மதிப்பில் ரூ. 58.74 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வந்தது. ஆனால், தற்போது அறிமுகமாக இருக்கும் நான்காம் தலைமுறை விராங்க்ளர் கணிசமான விலையுயர்வைப் பெற்று விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
2019 Jeep Wrangler Seen Testing Without Camo — American Launch Imminent!. Read In tamil.
Story first published: Saturday, April 27, 2019, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X