பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று ஜீப். இந்நிறுவனத்தில் இருந்து வெளிவரும் விலை மலிவான கார்களில் ஒன்றாக காம்பஸ் திகழ்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக பெயரெடுத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல மனிதர்கள் பலரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை சொந்தமாக வைத்துள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

இந்தியாவில் ஜீப் காம்பஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார் கபில் தேவ். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான கபில் தேவ் சமீபத்தில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். அவர் ஜீப் காம்பஸ் காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள், ஜீப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

சிகப்பு நிற காம்பஸ் காரை கபில் தேவ் வாங்கியுள்ளார். ஆனால் அவர் வாங்கியிருக்கும் வேரியண்ட் என்ன? என்பது சரியாக தெரியவில்லை. பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி இருக்கிறது. இதில், டாப்ஸி, ஜாக்குலின் பெர்ணாண்டஸ், அக்ஸய் குமார், ரோகித் ராய் உள்ளிட்டோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

அதே சமயம் மற்றொரு பிரபல நடிகரான சயிப் அலி கானிடம் ஜீப் கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி கார் உள்ளது. இதுதவிர இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான மஹேந்திர சிங் டோனி சமீபத்தில் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹவாக் எடிசனை டெலிவரி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜீப் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அதி சக்தி வாய்ந்த கார்களில் ஒன்று.

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

இது இறக்குமதி செய்யப்பட்ட மாடல். ஜீப் நிறுவனம் டோனிக்காக இதனை கஸ்டமைஸ் செய்து கொடுத்தது. நாம் மீண்டும் காம்பஸ் காருக்கு வருவோம். இது தற்போது இந்த செக்மெண்ட்டில் மிக பிரபலமான காராக உள்ளது. ஆனால் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற கார்களால் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு போட்டி அதிகரித்துள்ளது.

MOST READ: பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... யாருகிட்டயும் சொல்லீராதீங்க...

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் மாடல்களின் வருகை ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஒட்டுமொத்த விற்பனையில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இருந்தபோதும் இன்றும் பலரது ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஜீப் காம்பஸ் எஸ்யூவிதான். ஜீப் நிறுவனம் ஒரு தனித்துவமான பிராண்டாக திகழ்கிறது. அங்கிருந்து வரும் காம்பஸ் மாடலின் டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார் ஆர்வலர்களை ஈர்க்கிறது.

MOST READ: தரமான சம்பவம்... ஒரு பைக்கின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான ரியல் ஹீரோ... என்ன செய்தார் தெரியுமா?

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

கபில் தேவிற்கு டெலிவரி கொடுக்கப்பட்டது எந்த வேரியண்ட்? என்பது தெரியவில்லை என்றாலும் கூட, இது பார்ப்பதற்கு டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய லிமிடெட் ப்ளஸ் வெர்ஷன் போல தெரிகிறது. இதன் விலை சுமார் 26 லட்ச ரூபாய். இது ஆன் ரோடு விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம்... போலீஸை அலற விட்ட பாசக்கார தந்தை...

பாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ஜீப் காம்பஸின் போட்டியாளர்களான டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kapil Dev Buys Jeep Compass SUV Worth Rs.26 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X