கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவரிடம் மிகவும் விலை உயர்ந்த ஹை-எண்ட் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்று உள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்த காரைதான் அவர் தனது தினசரி பயன்பாட்டிற்கு உபயோகித்து வருகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ரேஞ்ச் ரோவர் காரானது, கஸ்தூரி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்த கார் இரண்டு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

பெங்களூரில் உள்ள சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று, இதன் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டிச்சென்றுள்ளார். இதன்பின் கடந்த பிப்ரவரி 22ம் தேதியன்று, பெங்களூர் பசவேஸ்வரா சர்க்கிள் பகுதியில், இந்த கார் அதிவேகத்தில் சென்றுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்த 2 போக்குவரத்து விதிமுறை மீறல்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கார் பதிவு செய்யப்பட்டுள்ள கஸ்தூரி மீடியா பிரைவேட் லிமிடெட்டிற்கு 2 நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டு விட்டன. இதற்கான மொத்த அபராதம் 600 ரூபாய். ஆனால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி இன்னும் அபராத தொகை செலுத்தப்படவில்லை.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கான ஆட்டோமேட்டட் சலான்கள் (Automated Challans) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெனரேட் ஆகியுள்ளது. சலான்கள் ஜெனரேட் ஆன அடுத்த ஏழு நாட்களுக்கு உள்ளாக அபராத தொகை செலுத்தப்பட வேண்டும். ஆனால் இன்னும் செலுத்தப்படவில்லை.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வருக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் எங்கும் தப்பித்து விடாது. அவர்கள் தாமாக முன்வந்து செலுத்த தவறினால், அபராத தொகையை நாங்கள் விரைவில் வசூலிப்போம். ஏறத்தாழ இந்த காரை தினந்தோறும் விதான் சவுதாவிற்கு (கர்நாடக மாநில சட்டப்பேரவை) முன்பாக பார்க்க முடியும்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

எனவே அடுத்த முறை நாங்கள் காரை பார்க்கும்போது கண்டிப்பாக அபராத தொகையை வசூலிப்போம் என்றார். ஆனால் விதான் சவுதாவிற்கு முன்பாக ஏறக்குறைய தினந்தோறும் இந்த காரை காண நேரிட்டாலும், ஏன் இன்னும் அபராத தொகை வசூலிக்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: TOI

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka Chief Minister Kumaraswamy’s Range Rover Booked For Traffic Violations Twice. Read in Tamil
Story first published: Thursday, March 21, 2019, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X