தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

தந்தை-மகன் இருவரும் ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. எதற்காக கேக் வெட்டப்பட்டது என்பதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் அதிக வைரலாவதில்லை, ஒரு சில வீடியோக்களை தவிர. அந்தவகையில், மனிதர்களுக்காவும், விலங்குகளுக்காவும் கொண்டாடப்பட்ட வீடிோக்களின் ராஜ்யமே இணையத்தில் உள்ளது. இதனையே நாம் அதிகம் பார்த்திருப்போம்.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

ஆனால், தற்போது பலர் பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஓர் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. அதுகுறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்டோடி குடும்பத்தினர். இவர்கள் கடந்த 50ம் ஆண்டுகளாக மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் சிஜே3பி என்ற மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

இந்த ஜீப்பை அவர்கள் வாங்கி கடந்த 2ம் தேதியுடன் 50 ஆண்டுகளாகி இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், அத்தினத்தை சிறப்பிக்க எண்ணிய அக்குடும்பத்தினர், ஜீப்பிற்கு கேக் வெட்டி, சுற்றத்தாருக்கு இனிப்பு வழங்கி, அவர்களின் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோவினை அக்குடும்பத்தினரே முன்டோடி வ்ளாக்ஸ் என்ற யுடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

அந்த வீடியோவில், முதலில் அவர்களை பற்றி அறிமுகம் செய்துக்கொள்ளும் அக்குடும்பத்தினர், தொடர்ந்து சிஜே 3பி ஜீப் பற்றிய சுவார்ஷ்ய தகவலை அளிக்கின்றனர்.

வீடியோவில் நாம் காணும் ஜீப்பின் நிறம் உண்மையான நிறம் அல்ல. அந்த ஜீப்பை நல்ல முறையில் பாதுகாக்கும் விதத்தில் ஜீப்பிற்கு 16 காவுஜ் மெட்டல் ஷீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, அதற்கு சிவப்பு நிறமும் வழங்கப்பட்டுள்ளது.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

இதுமட்டுமின்றி, ஜீப்பின் வீல்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிதாக ஆறு ஸ்போக்குகள் கொண்ட வீல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஜீப் மீது அவர்கள் கொண்ட தனிப்பட்ட அக்கறையின் காரணமாக அந்த கார் தற்போதும் புத்தம் புதிய ஜீப்பினை போன்று காட்சியளிக்கின்றது.

மஹிந்திரா ஜீப் சிஜே 3பி ஓர் 4X4 எஸ்யூவி ரகம் ஆகும். இந்த கார் ஆப் மற்றும் ஆன் ரோடில் பயன்படும் வகையில் வசதிகளைப் பெற்றுள்ளது. இந்த ஜீப்பில் 3-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் காணப்படுகின்றது. இவை லோ ரேஷியோ கியர்பாக்ஸ் ஆகும்.

தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!

மஹிந்திரா நிறுவனம் தற்போது தார் என்ற பெயரில் இதுபோன்ற ஜீப்களை தயாரித்து வருகின்றது. இதன் அடுத்த தலைமுறை தார் வருகின்ற 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தார் வாகனத்துடன் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka Family Members Celebrates 50th Birthday Of Mahindra Jeep CJ3B. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X