கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கியதுடன் மட்டுமல்லாமல், டிரைவர் மற்றும் பயணிகளிடம் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை செய்தது யார்? என தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

தமிழகத்தின் வேலூரில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அந்த பேருந்தை, குமரவேலு என்பவர் ஓட்டி சென்றார்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்தை பின் தொடர்ந்து கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார், பேருந்தை முந்தி செல்ல முயன்றது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் பேருந்து ஓட்டுனர் குமரவேலு வழிவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் காரின் டிரைவர் நீண்ட நேரம் ஹாரன் அடித்தபடியே இருந்தார். அப்போதும் ஓவர் டேக் செய்ய வழி கிடைக்கவில்லை. இவ்வாறு சில கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து வழி விடாமல் சென்று கொண்டே இருந்ததாக தெரிகிறது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதனால் காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் வாணியம்பாடி அருகே வந்ததும், தேசிய நெடுஞ்சாலையில் வைத்தே பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். இதன்பின் திடீரென காரில் இருந்து இறங்கிய அவர்கள், பேருந்து ஓட்டுனர் குமரவேலுவை சரமாரியாக தாக்கினர்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்கள் மூலமும் குமரவேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் குமரவேலு படுகாயம் அடைந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், அதன்பின் கர்நாடக மாநில அரசு பேருந்தை தாக்க தொடங்கியது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தில் பேருந்தின் டிரைவர் குமரவேலு மட்டுமின்றி, 5 பயணிகளும் காயம் அடைந்தனர்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதன்பின் காரில் வந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாணியம்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பின்னர் காயமடைந்த டிரைவர் குமரவேலு மற்றும் பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மற்ற பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலமாக அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்த சம்பவம் குறித்து டிரைவர் குமரவேலு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதி குமார் தலைமையில் வந்தவர்கள்தான் பேருந்தை அடித்து நொறுக்கியது தெரியவந்தது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

AsianetNews வெளியிட்டுள்ள செய்தியின்படி, இதுதொடர்பாக ராஜேஷ், சிவா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் திமுக நகர பொறுப்பாளர் சாரதி குமார் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி இரவு நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

முன்னதாக திமுக பிரமுகர்கள் சிலர், சென்னை பிரியாணி கடை, திருவண்ணாமலை செல்போன் கடை உள்ளிட்ட இடங்களில் இதேபோன்று தாக்குதல் நடத்தினர். கீழ்மட்ட நிர்வாகிகள் சிலரின் இத்தகைய செயல்களால், திமுக தலைமை அதிருப்தியடைந்தது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவே இதுபோன்று அத்துமீறி நடந்து கொள்ளும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இருந்தபோதும் கீழ்மட்ட நிர்வாகிகளின் இத்தகைய வரம்பு மீறிய செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எனவே இதுபோன்ற நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்த சூழலில் வாகன ஓட்டிகளுக்கு இடையே பல்வேறு காரணங்களால் சாலையில் இதுபோன்ற மோதல்கள் (Road Rage) ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தவிர்க்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து இனி பார்க்கலாம்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து ஒரு இடத்திற்கு கிளம்பும்போது, முன் கூட்டியே கிளம்புங்கள். இதன் மூலம் உங்கள் பயணத்தின்போது தாமதம் ஏற்பட்டால் கூட, சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்து விட முடியும். அத்துடன் அவகாசம் இருப்பதால் மற்ற வாகன ஓட்டிகளுடன் பிரச்னையையும் தவிர்க்கலாம்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

கால அவகாசம் இல்லாததால் ஏற்படும் அவசரம் காரணமாகவே பிற வாகன ஓட்டிகளுடன் மோதல் ஏற்பட நேரிடுகிறது. ஹாரன்களை சரியான நேரத்தில் மட்டும் உபயோகப்படுத்துங்கள். ஏனெனில் ஹாரன் காரணமாக ஏற்படும் அளவுக்கு அதிகமான இரைச்சல் பிறருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இது மோதலுக்கு வழிவகுத்து விடும். எனவே தேவையான இடங்களில், சரியான அளவில் மட்டும் ஒலி எழுப்புங்கள். ஒரு வேளை உங்களுடன் வேறு வாகன ஓட்டி யாராவது சண்டைக்கு வரும் பட்சத்தில், அவர்களுடன் ஐ கான்டாக்ட்டை (Eye Contact) தவிர்த்து விடுங்கள்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இது அவர்கள் சாந்தமடைய உதவும். அத்துடன் அவர்களுடன் மல்லுக்கட்டி நிற்காமல், ''ஐ யம் சாரி'' போன்ற மென்மையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இதன்மூலம் அவர்களின் கோபம் கறைந்து, பிரச்னை முடிவுக்கு வரும்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்குங்கள். அத்துடன் நீங்கள் ஏதேனும் வேறு விஷயம் தொடர்பான கோவத்தில் இருக்கும்போது, எக்காரணத்தை கொண்டும் வாகனங்களை எடுக்காதீர்கள்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஏனெனில் இந்த கோவத்தை, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் மீது நீங்கள் வெளிப்படுத்தி விடக்கூடிய அபாயம் உள்ளது. மற்ற வாகன ஓட்டிகள் சிறிய தவறு செய்தால் கூட, ஏற்கனவே கோவத்தில் இருக்கும் நீங்கள் அவர்களை வசைபாட நேரிடும்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பதிலுக்கு அவர்களும் வசைபாட ஆரம்பிக்க, இது கைகலப்பில் கூட முடியலாம். எனவே கூடுமானவரை பொறுமையாக இருக்கும் நேரங்களில் வாகனங்களை இயக்குங்கள். கோவமாக இருந்தால், சற்று நேரம் எடுத்துக்கொண்டு மீண்டும் பொறுமையான பின் வாகனங்களை இயக்கலாம்.

கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

வாகனங்களை இயக்கும்போது நல்ல மன நிலையில் இருப்பதற்கான வழிமுறைகளை கண்டறியுங்கள். உதாரணத்திற்கு காரில் பயணம் செய்கிறீர்கள் என்றால், பாடல்களை ரசித்து கேட்கலாம். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுடன் பிரச்னையை தவிர்க்கலாம்.

Most Read Articles
English summary
Karnataka Government Bus Attacked By DMK Party Near Vellore: How To Avoid Road Rage. Read in Tamil
Story first published: Monday, February 4, 2019, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X