இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் காரை வாங்கிய 2வது நபர் என்ற பெருமை ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதற்காக அவர் செலுத்தப்போகும் வரி எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் பிரம்மித்து போவது உறுதி.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

கடவுளின் சொந்த தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா இயற்கை எழில் கொஞ்சும் மாநிலங்களில் ஒன்று. பச்சை பசேல் என காட்சியளிக்கும் மலைகள், மிக நீளமான கடற்கரைகள் ஆகியவற்றால் கேரளா அறியப்படுகிறது. கேரளா என்றவுடன் நம் மனதிற்கு சட்டென நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் சூப்பர் கார்கள் மீதான அம்மாநில மக்களின் காதல்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

சூப்பர் கார்களுக்கு என கேரளாவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. கோட்டயம் பகுதியை சேர்ந்த சிரில் பிலிப் (Cyril Philip) அவர்களில் ஒருவர். கோட்டயம் பகுதியில் பிரபல தொழில் அதிபராக விளங்கி வரும் சிரில் பிலிப்பிடம், பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4), ஃபோக்ஸ்வேகன் பீட்லி (Volkswagen Beetle) உள்ளிட்ட லக்ஸரி கார்கள் உள்ளன.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் செடான் ரக சொகுசு கார் ஒன்றையும் சிரில் பிலிப் வைத்துள்ளார். ஆனால் லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) சூப்பர் காரை சொந்தமாக்க வேண்டும் என்பது சிரில் பிலிப்பின் கனவு. இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் சூப்பர் கார்களில் ஒன்றுதான் ஹூராகேன்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

லம்போர்கினி ஹூராகேன் காரை வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. ஆனால் கேரள மாநில அளவில் பார்த்தால், இதுவரை ஒரே ஒரு லம்போர்கினி ஹூராகேன் கார் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரை வைத்திருப்பவர் பிரபல நடிகர் பிருத்விராஜ் (Prithviraj). லம்போர்கினி ஹூராகேன் எல்பி 580-2 மாடலை (Huracan LP 580-2) பிருத்விராஜ் வைத்துள்ளார்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

இந்த காருக்கு பேன்ஸி நம்பர் வாங்குவதற்காக பிருத்விராஜ் சுமார் 7 லட்ச ரூபாயை செலவிட்ட செய்தி சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தொழில் அதிபர் சிரில் பிலிப் தற்போது தனது லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் கனவை நிறைவேற்றியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து செகண்ட் ஹேண்டில், லம்போர்கினி ஹூராகேன் காரை சிரில் பிலிப் வாங்கியுள்ளார்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

சிரில் பிலிப் வாங்கியிருப்பது ஹூராகேன் எல்பி 610-4 (Huracan LP 610-4) மாடல் ஆகும். சிரில் பிலிப் விரைவில் இந்த காரை கேரளாவில் பதிவு செய்ய உள்ளார். இதன் மூலம் 'கேஎல்' (KL) நம்பர் பிளேட்டை பெறும் இரண்டாவது லம்போர்கினி ஹூராகேன் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

லம்போர்கினி நிறுவனமானது, ரியர் வீல் டிரைவ் (Rear Wheel Drive) மற்றும் ஆல் வீல் டிரைவ் All Wheel Drive) என மொத்தம் 2 வேரியண்ட்களில் ஹூராகேன் காரை வழங்குகிறது. இதில், சிரில் பிலிப் வாங்கியுள்ள கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. பொதுவாக வேக தடைகள் நிறைந்த இந்திய சாலைகளில் லம்போர்கினி ஹூராகேன் போன்ற சூப்பர் கார்களை ஓட்டுவது கடினம்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

அதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (Ground Clearance) குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால் சிரில் பிலிப் வாங்கியுள்ள லம்போர்கினி ஹூராகேன் காரில், சஸ்பென்ஸனை 45 மில்லி மீட்டர் அதிகரித்து கொள்வதற்கான வசதி உள்ளது. இதன்மூலம் குண்டும், குழியுமான சாலைகள் மற்றும் வேக தடைகள் நிறைந்த சாலைகளில் காரை சிக்கலின்றி ஓட்ட முடியும்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

சிரில் பிலிப்பின் லம்போர்கினி ஹூராகேன் காரானது, லைம் க்ரீன் (Lime green) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் பாடி, கார்பன் ஃபைபர் (Carbon Fibre) மற்றும் அலுமினியம் (Aluminium) கலந்த கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டிவிடும்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

லம்போர்கினி ஹூராகேன் காரில், 5.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை வாரி வழங்கும். இதில், 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது இன்ஜின் சக்தியை காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்துகிறது.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

முன்னதாக லம்போர்கினி நிறுவனம் கலர்டோ (Lamborghini Gallardo) என்ற காரை விற்பனை செய்து வந்தது. அதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஹூராகேன். புதிய லம்போர்கினி ஹூராகேன் காரானது 2.99-3.97 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய 2வது நபர் இவர்தான்... வரி எவ்வளவு என தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்

ஷோரூமை விட்டு வெளியே வருகையில் ஆன் ரோடு விலை இன்னும் பல லட்சங்கள் அதிகரிக்கும். இதனிடையே சிரில் பிலிப் தனது லம்போர்கினி ஹூராகேன் காரை, கோட்டயம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யவுள்ளார். வரிகளுக்கு என தனியாக அவர் 80 லட்ச ரூபாயை செலுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மனோரமா ஆன்லைன் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக பார்த்தால் லம்போர்கினி ஹூராகேன் காரின் விலை மிக அதிகம்தான். ஆனால் லம்போர்கினி நிறுவனத்தை பொறுத்தவரை அதன் விலை மிகவும் குறைவு. ஆம், லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்து வரும் மிக மலிவான கார்களில் ஹூராகேனும் ஒன்று.

Most Read Articles
English summary
Kerala Businessman Bought Lamborghini Huracan Super Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X