திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

இந்திய வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருந்த கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கியுள்ள முதல் கார்தான் ஹெக்டர். எஸ்யூவி ரகத்தை சேர்ந்த காரான ஹெக்டர் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் டெலிவரி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் காருக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏற்கனவே 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இதன் காரணமாக எம்ஜி ஹெக்டர் காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களை கடந்துள்ளது.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எம்ஜி நிறுவனம் எதிர்பார்த்திருக்குமா? என்பதே நிச்சயமாக சந்தேகம்தான். அந்த அளவிற்கு எம்ஜி ஹெக்டர் காருக்கு அமோக வரவேற்பை வாரி வழங்கியுள்ளது இந்திய மார்க்கெட். ஆனால் ஒரு மாதத்திற்கு எம்ஜி நிறுவனத்தால் 2,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். தற்போதைய நிலையில் அதன் உற்பத்தி திறன் இவ்வளவுதான்.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

இதன் காரணமாகதான் ஒவ்வொரு நாளும் வெயிட்டிங் பீரியட் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் முடிந்த வரை வாடிக்கையாளர்களுக்கு வெகு வேகமாக கார்களை டெலிவரி செய்ய எம்ஜி நிறுவனம் முயன்று வருகிறது. கேரளாவில் உள்ள எம்ஜி இந்தியா நிறுவனத்தின் டீலர்ஷிப் ஒன்றில் சமீபத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த செக்மெண்ட்டில் விற்பனையாகும் ஒரு காருக்கு இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட்டில் இதற்கு முன்பாக வேறு எந்த காரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான முன்பதிவுகளை பெற்றதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான டீலர்கள், குறிப்பாக முக்கிய நகரங்களில் உள்ள டீலர்கள் பலர் எம்ஜி ஹெக்டர் காருக்கு 500க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளனர்.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

ஏன் எம்ஜி ஹெக்டர் காருக்கு இவ்வளவு வரவேற்பு? இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர்தான். பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் டிசிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கிறது.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

இதில், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன் ரூஃப் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் 10.4 இன்ச் ஐஸ்மார்ட் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இதன் டிரைவர் இருக்கையை மின்னணு முறையில் நான்கு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட வசதிகளும் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வேரியண்ட்டை பொறுத்து 2 முதல் 6 ஏர் பேக்குகள் வரை கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இதுதவிர டிராக்ஸன் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை 12.18 லட்ச ரூபாய் மட்டுமே. இது நிச்சயமாக ஆச்சரியமான ஒரு விலை நிர்ணயம்தான். எம்ஜி ஹெக்டர் காரின் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 16.88 லட்ச ரூபாய். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பரிமாணங்கள் அடிப்படையில் பார்த்தால் இந்த செக்மெண்ட்டில் பெரிய கார்களில் ஒன்றாகவும் எம்ஜி ஹெக்டர் திகழ்கிறது.

திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்.. இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

எம்ஜி ஹெக்டர் காரின் நீளம் 4,655 மிமீ. அகலம் 1,835 மிமீ. உயரம் 1,760 மிமீ. வீல் பேஸ் 2,750 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 192 மிமீ. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிட்டு வருகிறது. அடுத்ததாக இஇஸட்எஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Image Courtesy: Jimmy Jose/Facebook

Most Read Articles

English summary
Kerala Dealer Delivers 30 MG Hector SUVs In One Day. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X