டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடி போட்டியாளராக கருதப்படும் கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை காணலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்திய கார் சந்தையில் புதிய மாடல்களுடன் கால் பதிக்க இருக்கிறது. ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைத்துள்ள அந்த நிறுவனம், கார் உற்பத்தி பிரிவின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான சோதனை முறையில் உற்பத்தியையும் துவங்கி இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

இதற்காக நடந்த விழாவில் பேசிய கியா மோட்டார்ஸ் அதிகாரிகள், முதல் மாடலாக எஸ்பி-2 கான்செப்ட் அடிப்படையிலான புதிய எஸ்யூவி கார் வர இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில், இந்நிகழ்ச்சியில் மற்றொரு மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதற்கான தகவலையும் காண முடிந்தது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

ஆம், இந்தியாவில் இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்தான் இந்தியாவின் தலைசிறந்த எம்பிவி கார் மாடலாக இருந்து வருகிறது. இதற்கு நேர் போட்டியான மாடலும் இல்லை. இந்த ரகத்தில் எம்பிவி காரை களமிறக்கவும் கார் நிறுவனங்கள் விரும்பவும் இல்லை.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

ஏனெனில், இன்னோவா மார்க்கெட்டை குறிவைப்பதும், அதனை உடைப்பதும் எளிதான காரியமல்ல என்று கார் நிறுவனங்கள் கருதி விலகி நிற்கின்றன. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட கூடுதல் பிரிமீயம் அம்சங்கள் மற்றும் அதிக இடவசதி கொண்ட தனது கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

மேலும், கியா மோட்டார்ஸ் கார் ஆலையில் உற்பத்தி சோதனை முறையில் துவங்கப்பட்ட நிகழ்ச்சியில், எஸ்பி-2 கான்செப்ட் தவிர்த்து, கார்னிவல் எம்பிவி காரின் விபரங்கள் அடங்கிய தகவல் பலகைகளும் இடம்பெற்றிருந்தன. எனவே, இந்த கார் இந்தியா வருவது உறுதியாகி இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியா? சான்ஸே இல்ல," என்று சொல்பவர்களின் கவனத்தையும் இந்த புதிய கியா கார்னிவல் கார் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதி மற்றும் கூடுதல் இருக்கைகளை இந்த கார் பெற்றிருக்கும் என்பதுதான்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கியா கார்னிவல் எம்பிவி கார் 5,155 மிமீ நீளமும், 1,985 மிமீ அகலமும், 1,740 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த காரின் வீல் பேஸ் 2,060 மிமீ ஆக இருக்கிறது. மேலும், 7 சீட்டர், 8 சீட்டர், 9 சீட்டர் மற்றும் 11 சீட்டர் என வாடிக்கையாளர் விரும்பும் இருக்கை வசதி தேர்வுகளிலும் வர இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

இதனால், இதுவரை இன்னோவா மட்டுமே பயன்படுத்தி வந்தவர்களின் கவனத்தை கூட இந்த கார் ஈர்த்துள்ளது. தொழில்நுட்ப அம்சங்களிலும் குறைச்சல் ஏதும் இருக்காது என்பதும் ஆவலை தூண்டி இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 199 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

இன்னோவா க்ரிஸ்ட்டா அளவுக்கு எஞ்சின் பவர்ஃபுல்லாக இல்லையென்றாலும், இருக்கை வசதி, தொழில்நுட்ப வசதிகளில் வெகுவாக கவரும். டிசைனிலும் பிரம்மாண்ட காராக இருப்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவை பெறும் என்று கருதப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

மேலும், கியா கார்னிவல் எம்பிவி காரை நேரடியாக இறக்குமதி செய்யாமல், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்வதன் மூலமாக விலையை சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பும் கியா மோட்டார்ஸ் வசம் உள்ளது. அதாவது, ரூ.20 லட்சம் முதல் ரூ.22 லட்சத்திற்கு இடையிலான ஆரம்ப விலையில் கொண்டு வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பேஸ் வேரியண்ட்டைவிட விலை சில லட்சங்கள் அதிகம் இருந்தாலும், அதிகம் பேர் பயணிப்பதற்கான இருக்கைகள், இடவசதி, தொழில்நுட்ப வசதிகளில் வாடிக்கையாளர்களை கவரும். மேலும், புத்தம் புது மாடலாக இருப்பதும் கூடுதல் விஷயமாக இருக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வருகிறது கியா கார்னிவல் கார்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் சராசரியாக மாதத்திற்கு 7,000 கார்கள் என்ற அளவில் விற்பனை ஆகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை நிச்சயம் கியா மோட்டார்ஸ் குறிவைக்காது. ஆனால், கார்னிவல் எம்பிவி கார் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்துடன் விற்பனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை பெறும் என்று கூறலாம்.

Most Read Articles
English summary
Kia Carnival MPV Confirmed For India And Will Challenge Toyota Innova Crysta
Story first published: Thursday, January 31, 2019, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X