இந்தியாவில் 3 இருக்கை வசதி கொண்ட மாடல்களில் அறிமுகமாகிறது கியா கார்னிவல்!

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் மூன்று விதமான இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு இதுவரை நேரடி போட்டி எதுவும் இல்லை. இதனால், தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறது. இந்த நிலையில், கியா கார்னிவல் கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கியா கார்னிவல் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த கார் தற்போது இந்தியாவில் வைத்து தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

மேலும், இந்த கார் குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி, புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் மூன்று வரிசை இருக்கை அமைப்பில் வருவது உறுதியாகி இருக்கிறது. அத்துடன், இருக்கை எண்ணிக்கையை பொறுத்து மூன்று மாடல்களில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

கியா கார்னிவல் கார் வெளிநாடுகளில் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 11 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 6 சீட்டர், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் நிலையில், அதிக சொகுசை விரும்புவோருக்கு கூடுதல் தேர்வாக 6 சீட்டர் மாடல்களிலும் வர இருக்கிறது கியா கார்னிவல் கார்.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

புதிய கியா கார்னிவல் கார் பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்படும். அதாவது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார்களுக்கு இடையிலான ரகத்தில் மிகவும் சொகுசான எம்பிவி கார் மாடலாக கியா கார்னிவல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

புதிய கியா கார்னிவல் காரின் விலை உயர்ந்த மாடல்களில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலி மூலமாக பல்வேறு தகவல்களையும், கட்டுபாட்டு வசதிகளையும் பெறும் வாய்ப்பு, இரண்டு சன்ரூஃப் அமைப்பு, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் என பல்வேறு வசதிகளை இந்த கார் வழங்கும்.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

புதிய கியா கார்னிவல் கார் 5,115 மிமீ நீளமும், 1,985 மிமீ அகலமும், 1,740 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரினஅ வீல் பேஸ் நீளம் 3,060 மிமீ ஆக உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட இந்த காரின் வீல்பேஸ் 135 மிமீ கூடுதல் நீளத்தை பெற்றிருப்பதால், இடவசதி மிக சிறப்பாக இருக்கும்.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

இந்தியாவில் வர இருக்கும் காரில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 202 எச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

இந்தியாவில் கியா கார்னிவல் காருக்கு வழங்கப்படும் இருக்கை வசதிகள் விபரம்

புதிய கியா கார்னிவல் கார் ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும். இந்த கார் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to report, Kia Motors is planning to launch Carnival MPV car in India with three seating configurations, 6, 7, and the 8-seater arrangements.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X