டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்தும் வகையிலான காரை கியா நிறுவனம் களமிறக்கவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால், சில அதிரடி நடவடிக்கைகளை கியா தொடங்கியுள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் கொடி கட்டி பறக்கின்றன. ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்களை இதற்கு ஓர் உதாரணமாக கூறலாம். இந்நிறுவனங்களின் கார்கள் தரமாக இருப்பதால்தான் உலகம் முழுக்க வரவேற்பு உள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இதில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி கொண்டுள்ளது. இந்த சூழலில் கியா நிறுவனமும் இந்தியாவில் கால் பதிக்க விரும்பியது. இதற்காக கியா நிறுவனம் தமிழகத்தைதான் தேர்வு செய்தது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் தொழிற்சாலை அமைத்து அதன் மூலம் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய கியா நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை திடீரென ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதிக்கு சென்றது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

தமிழக ஆட்சியாளர்கள் லஞ்சம் கேட்டதால்தான் கியா நிறுவனம் ஆந்திராவிற்கு சென்று விட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சை இன்று வரை ஓயவே இல்லை. இந்த சர்ச்சைகளுக்கு இடையே, அனந்த்ப்பூர் பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை கியா நிறுவனம் முடுக்கி விட்டது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இந்த தொழிற்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ட்ரையல் புரொடக்ஸன் தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு தற்போது பரிசோதனை அடிப்படையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

எனவே வெகு விரைவில் கியா நிறுவன கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருப்பதால், விரைவில் கார்களை அறிமுகம் செய்து, போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்க கியா முடிவு செய்துள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இதற்காக எஸ்பி2ஐ (SP2i) காரை முதலில் களத்தில் இறக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது 5 சீட்டர் எஸ்யூவி கார் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் கியா நிறுவன கார் இதுவாகதான் இருக்கும். இந்த காரின் டிரையல் புரொடக்ஸன்தான் தற்போது அனந்த்பூர் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

எனவே வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எஸ்பி2ஐ எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.9 முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் கியா எஸ்பி2ஐ கார் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

கியா எஸ்பி2ஐ கார் விற்பனைக்கு அறிமுகம் ஆனவுடன், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹாரியர் மற்றும் நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும். இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தயாரிப்புகளை களமிறக்க கியா முடிவு செய்துள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இதில், முக்கியமானது கார்னிவல் (Carnival). இது எம்பிவி வகையை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இங்கு கியா நிறுவனம் லான்ச் செய்யும் இரண்டாவது காராக இது இருக்கும்.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

தற்போதைய சூழலில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாதான், இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சரி நிகரான போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால்தான், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சி கொண்டுள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் சாம்ராஜ்யத்திற்கு கியா கார்னிவல் முடிவு கட்டும் என கூறப்படுகிறது. கியா கார்னிவல் எம்பிவி காரானது, இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு நேரடி போட்டியாளராக திகழும்.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ், சௌகரியமான இட வசதி, சொகுசு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்து விதத்திலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை காட்டிலும், கியா கார்னிவல் எம்பிவி தலை சிறந்து விளங்கும்.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

எனவே தரமான எம்பிவி காருக்கு இவ்வளவு நாட்களாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை மட்டுமே நம்பி கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், கியா கார்னிவல் கார் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

எஸ்பி2ஐ எஸ்யூவி, கார்னிவல் எம்பிவி தவிர ஒரு காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் க்ராஸ்-ஹேட்ச்பேக் வகை கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் கியா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

அத்துடன் நாடு முழுவதும் வலுவான டீலர்ஷிப் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளையும் கியா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. தொடக்கத்தில் இந்தியா முழுக்க மொத்தம் 35 டீலர்ஷிப்களை அமைக்க கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இதில், 3 ஷோரூம்கள் கேரளாவில் அமைவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுகுறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. கேரளாவை சேர்ந்த அலேசன் குழுமம்தான் (Alyson Group), அம்மாநிலத்தில் கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பாக இருக்கப்போகிறது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இதனை அலேசன் குழுமம் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது. கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 3 இடங்களில் டீலர்ஷிப்கள் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய இடங்களில் கியா டீலர்ஷிப்களை அமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

ஆனால் இதற்கு முன்னதாகவே உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கியா டீலர்ஷிப் திறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஷோரூம் தற்போது கிட்டத்தட்ட தயார் ஆகி விட்டது. எனவே இதுதான் இந்தியாவின் முதல் கியா ஷோரூம் ஆக இருக்கும்.

டொயோட்டாவின் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்த போகும் கியா கார்... இந்தியர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இந்த கட்டிடம் பார்ப்பதற்கு வழக்கமான ஷோரூம்களை போல் அல்லாமல், ஒரு கார்ப்பரேட் அலுவலகம் போன்று காட்சியளிக்கிறது. இதனிடையே நாட்டின் எஞ்சிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மற்ற டீலர்ஷிப்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. கியா நிறுவனத்தின் இவ்வாறான அடுத்தடுத்த அதிரடிகள், போட்டி நிறுவனங்களை கலக்கம் அடைய செய்துள்ளன.

Most Read Articles
English summary
Kia Motors Dealerships In India — Kerala Gets 3 Out Of 35 Initial Kia Showrooms In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X