அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

கடந்த அக்டோபரில் கியா செல்டோஸ் காரின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு அசர வைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் வாடிக்கையாளர்களின் நம்பர்-1 சாய்ஸாக மாறி இருக்கிறது. இதனால், மாதத்திற்கு மாதம் விற்பனை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

அறிமுகம் செய்யப்பட்ட ஆகஸ்ட் மாதத்தில் 6,236 செல்டோஸ் கார்களும், செப்டம்பரில் 7,754 செல்டோஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த அக்டோபரில் கியா செல்டோஸ் விற்பனை போட்டியாளர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

ஆம். கடந்த மாதம் 12,850 கியா செல்டோஸ் கார்கள் விற்பனையாகி அசர வைத்துள்ளது. இதன் ரகத்திலான மாடல்களை ஒப்பிடும்போது செல்டோஸ் காரின் விற்பனை மிக அதிகம். இதன்மூலமாக, இந்தியாவின் புதிய பிளாக் பஸ்டர் மாடலாக கியா செல்டோஸ் மாறி இருக்கிறது.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

கியா செல்டோஸ் காரின் டிசைன், சிறப்பம்சங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. அத்துடன் இந்த கார் ரூ.9.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதும் மதிப்பு வாய்ந்த மாடலாக மாறி இருக்கிறது.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

புதிய கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. வசீகரிக்கும் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளன.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்திற்கு நேரடி இன்டர்நெட் வசதி உள்ளது. இதனை யுவோ என்ற செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோன் மூலமாக இணைத்து 37 விதமான தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும். இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

புதிய செல்டோஸ் காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் ஏர் ஃப்யூரிஃபயர் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் இருக்கைகள், 8 வித நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

புதிய கியா செல்டோஸ் காரில் 360 டிகிரி கேமரா, ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

புதிய கியா செல்டோஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

அட்ராசக்கை... அக்டோபரில் பின்னி பெடலெடுத்த கியா செல்டோஸ் விற்பனை!

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.9.69 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், ரெனோ டஸ்ட்டர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுடன் இந்த கார் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
South Korean car maker, Kia Motor has announced that it has recorded retail sales of 12,800 units of the Seltos SUV in October, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X