செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

செல்டோஸ் எஸ்யூவியைவிட விலை குறைவான புதிய எஸ்யூவி மாடலை கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கார் மாடலாக கியா செல்டோஸ் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது. இந்த எஸ்யூவி ரக கார் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 50,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள நிலையில், விற்பனையிலும் அசத்தி வருகிறது.

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

இந்த உற்சாகத்துடன் அடுத்தடுத்த கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது கியா மோட்டார்ஸ் நிறுவனம். அந்த வகையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார் மாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறது.

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

அத்துடன், இரண்டாவது மாடலாக தனது கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார்னிவல் எம்பிவி கார் மிகவும் பிரிமீயம் அம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

வெளிநாடுகளில் 7 சீட்டர் முதல் 11 சீட்டர் வரையிலான இருக்கை வசதியுடன் கிடைக்கிறது. இந்தியாவில் 7 சீட்டர் மாடலாக கார்னிவல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் கொண்டு வரப்பட இருக்கிறது.

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

கியா கார்னிவல் வருகை ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்ற நிலையில், தற்போது மூன்றாவது மாடலாக புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது வெனியூ காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. QYI அல்லது QY என்ற குறியீட்டுப் பெயரில் கியா நிறுவனம் உருவாக்கி வருகிறது.

MOST READ: பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க இதுதான் வழி... இனி டெய்லியும் இத ட்ரை பண்ணுங்க

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

முழுக்க முழுக்க இந்திய மார்க்கெட்டிற்கு தக்க சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த மாடலிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. கியர்பாக்ஸ் தேர்வுகளும் அவ்வாறே இருக்கும்.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

அதேபோன்று, வெனியூ காரில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புளூலிங்க் செயலி ஆகியவை கியா நிறுவனத்தின் புதிய வெனியூ காரில் சில மாறுதல்களுடன் வழங்கப்படும். கியா பிராண்டில் யுவோ என்ற பெயரில் இந்த செயலி குறிப்பிடப்படுகிறது.

MOST READ: பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Via - NDTV Auto

Most Read Articles

English summary
KIA Motors is working on new compact SUV and is expected to launch festive season of next year.
Story first published: Monday, October 14, 2019, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X