Just In
- 1 hr ago வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
- 3 hrs ago பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
- 5 hrs ago புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
- 7 hrs ago 2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
Don't Miss!
- Technology Google-ஐ கோர்ட்டுக்கு இழுத்த ஜப்பான் டாக்டர்கள்.. அதுக்கு நான் என்னடா பண்ணுறது.. கதறும் சுந்தர் பிச்சை!
- News கர்நாடகாவை உலுக்கும் கவுன்சிலர் மகள் படுகொலை! 'லவ் ஜிகாத்' என பாஜக பந்த்.. இஸ்லாமியர்களும் பங்கேற்பு
- Finance சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் திறக்கணுமா? இந்த பேங்க்ல நிறைய சலுகை தராங்க..நோட் பண்ணுங்க!
- Movies கில்லி ரீ ரிலீசுக்கு வந்த கூட்டம்.. ஓட்டு போட வரல.. இயக்குனர் ஹரி வேதனை!
- Sports தமிழ்நாட்டின் குகேஷ் செஸ் உலகில் மாபெரும் சாதனை.. விசுவநாதன் ஆனந்த் சாதனை முறியடிப்பு
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க அவங்க வேலை செய்யுற இடத்தில் ராஜா மாதிரி இருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!
ஒரே ஒரு கார் மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது கியா மோட்டார்ஸ் நிறுவனம். அதுவும் மூன்று மாதங்களில் இந்த சாதனையை கியா படைத்துள்ள போட்டியாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் செல்டோஸ் என்ற எஸ்யூவி வகை காருடன் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. ஆரம்பமே இந்த நிறுவனத்திற்கு அமர்க்களமாக அமைந்தது. செல்டோஸ் காருக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில், கடந்த மாதம் 12,850 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து கியா மோட்டார்ஸ் அசத்தி இருக்கிறது. மேலும், ஒரே ஒரு கார் மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவில் மிக நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோண்டா, டொயோட்டா கார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியாவின் 5வது பெரிய நிறுவனமாக மாறி இருக்கிறது.
கடந்த மாதம் மாருதி நிறுவனம் 1,39,000 கார்களை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்தது. நீண்ட காலத்திற்கு பின்னர் மாருதி விற்பனையில் சற்று ஏற்றம் பெற்றது. இரண்டாவது இடத்தில் 50,000 கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் உள்ளது.
மூன்றாவது இடத்தில் 18,460 கார்களை விற்பனை செய்த மஹிந்திரா நிறுவனமும், நான்காவது இடத்தில் 13,200 கார்களை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளன. இந்த நிலையில், 12,850 கார்களை விற்பனை செய்த கியா மோட்டார்ஸ் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதுவும் இந்திய சந்தையில் கால் பதித்து இரண்டே மாதங்களில் ஒரே ஒரு கார் மாடல் மூலமாக இந்த சாதனையை படைத்துள்ளது.
ஆறாவது இடத்தில் 11,866 கார்களை விற்பனை செய்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும், ஏழாவது இடத்தில் 11,500 கார்களை விற்பனை செய்துள்ள ரெனோ நிறுவனமும் இடம்பிடித்தன. 10,010 கார்களை விற்பனை செய்த ஹோண்டா நிறுவனம் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாதத்திற்கு மாதம் ஹோண்டாவின் விற்பனை கடும் தடுமாற்றத்தையும், சரிவையும் சந்தித்து வருகிறது.
கடந்த மாதம் ஒன்பதாவது இடத்தில் 7,077 கார்களை விற்பனை செய்த ஃபோர்டு நிறுவனமும், பத்தாவது இடத்தில் 3,536 கார்களை விற்பனை செய்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனமும் பிடித்துள்ளன. இதைத்தொடர்ந்து, 11வது இடத்தில் 3,213 கார்களை விற்பனை செய்துள்ள ஃபோக்ஸ்வேகன் உள்ளது.
பட்டியலின் கடைசியில் நிஸான், ஸ்கோடா, ஃபியட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்து கடைசியில் உள்ளன. கடந்த மாதம் நிஸான் நிறுவனம் 1,581 கார்களையும், ஸ்கோடா ஆட்டோ 1,300 கார்களையும், ஃபியட் 854 கார்களையும் விற்பனை செய்துள்ளன.
Source: ET Auto
-
நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
-
இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
-
எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?