செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

செல்டோஸ் காருக்கு கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை திக்குமுக்காட செய்துள்ளது. இதையடுத்து, விற்பனையை அதிகரிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கி உள்ளது.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை களமிறக்கியது. இந்த காருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

கார் சந்தை மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்தாலும், கியா செல்டோஸ் காருக்கு இதுவரை 60,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. அதுவும் இந்திய சந்தையில் இறங்கிய உடனே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது கியா நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

இந்த நிலையில், செல்டோஸ் காரின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்கும் விதத்திலும் டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

இதன்படி, டீலர்கள் எண்ணிக்கையை 260 என்ற எண்ணிக்கையில் இருந்து 300 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 50 டீலர்கள் வரை புதிதாக நியமிக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

மேலும், வரும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்னிவல் எம்பிவி காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு தக்கவாறு வலுவான எண்ணிக்கையிலான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தேவைப்படும். இதனை மனதில் வைத்து புதிய டீலர்களை மிக விரைவாக நியமிக்க முடிவு செய்துள்ளது.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

நாட்டின் வடக்கு, வடகிழக்கு, தெலங்கானா, கர்நாடாக மற்றும் மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் புதிய டீலர்களை நியமிக்கவும், டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும் கியா திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய டீலர்கள் செயல்பாட்டிற்கு வரும்.

செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!

வரும் பிப்ரவரி மாதம் கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் கியா நிறுவனம், அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் வெனியூ அடிப்படையிலான புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
English summary
South Korea based auto manufacturer, Kia Motors, is planning to expand its dealer network to over 300 touch-points across the country. The company started with 260 touch points and plans to achieve the numbers by March 2020.
Story first published: Monday, November 18, 2019, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X