Just In
- 7 hrs ago
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- 9 hrs ago
கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்
- 9 hrs ago
ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...
- 10 hrs ago
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி!
Don't Miss!
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- News
என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி
- Technology
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...
கியா மோட்டார்ஸின் புதிய தயாரிப்பு மாடலான கியா கே5 செடான் கொரியா ஆட்டோமொபைல் மார்கெட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த காரின் சில முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மாடலாக புத்துணர்ச்சியான ஸ்டைலில் வெளியாகவுள்ள இந்த காரை கியா நிறுவனம் கம்பீரமான தோற்றத்தில் வடிவமைத்துள்ளது. ஸ்போர்ட், மாடர்ன் மற்றும் போல்ட் என மூன்று தோற்றங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரின் முன்புற க்ரில் மற்றும் ஹெட்லைட் அமைப்பு தான் இதனை முந்தைய மாடலில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகிறது.

ஏனெனில் க்ரில் முந்தைய மாடலை விட கூர்மையாக உள்ளது. அதிலும் முன்புற ஹெட்லைட் அமைப்பு முழுவதும் வித்தியாசமான 'இதயத்துடிப்பு' டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ரில்லுக்கு அடிப்பகுதியில் உள்ள பம்பர், முன்புறத்திற்கு இன்னும் அழகூட்டும் வடிவில் நகரப்புற சாலைக்களுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் நீல நிற மாடலுக்கு மட்டும் காரின் பாடி நிறத்தில் ரூப் கொடுக்காமல் மற்ற இரு மாடல்களை போல கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீல நிற கே5 செடான் கூடுதலான தனித்துவத்தை பெற்றுள்ளது. கே5 செடானில் ஃப்ரேம்லெஸ் ஜன்னல்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதன் வழியாக உட்புற பாகங்களை தெளிவாக பார்க்க முடியவில்லை.

கியா நிறுவனத்தின் இந்த புதிய கே5 செடான் இதன் முந்தைய மாடலை விட நீளத்திலும் அகலத்திலும் பெரியதாகவே உள்ளது. அதாவது இதன் நீளம் முந்தைய மாடலை விட 50 மிமீ அதிகமாக 4,905 மிமீ ஆகவும், அகலம் 25 மிமீ அதிகமாக 1,860 மிமீ ஆகவும் இந்த புதிய மாடலில் உள்ளது. ஆனால் உயரம் முந்தைய மாடலை விட 20 மிமீ குறைக்கப்பட்டு 1,445 மிமீ ஆக உள்ளது. இந்த உயரம் குறைப்பே கே5-ன் நீளம் மற்றும் அகலம் அதிகரிப்பிற்கு காரணம்.

குறைவான உயரத்தால் கே5, இளமையான மிகவும் உயர்ரக காரை போல் காட்சியளிக்கிறது. இதன் வீல்பேஸ்ஸின் அளவு 2,850 மிமீ ஆகும். இந்த காரின் பின்புற விளக்கு மூன்று பக்கங்களுக்கு சேர்த்து ஒரே விளக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பின்புறத்தில் இருந்து இந்த காரை பார்க்கும் போது பின்புறத்தில் சிவப்பு நிறத்தில் றெக்கை ஒன்று உள்ளது போல் தெரிகிறது.

கே5 செடானின் மூன்று நிற மாடல்களிலும் வெள்ளை நிற பார்டர் ஒன்று முன்புற விண்ட்ஸ்க்ரீனில் ஆரம்பித்து பின்புற விண்ட்ஸ்க்ரீன் வழியாக சென்று மீண்டும் மறுபக்க முன்புற விண்ட்ஸ்க்ரீனில் முடிவது போல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன், முன்புற இதயத்துடிப்பு ஹெட்லைட் டிசைன் மற்றும் றெக்கை வடிவிலான டெயில் லேம்ப் டிசைன் போன்றவற்றை முற்றிலும் கே5 மாடலை முந்தைய மாடலில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
Most Read:கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

இவற்றுடன் இந்த கார் புதிய டிசைனில் மெஷின்-கட் அலுமினியம் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. இந்த அலாய் சக்கரங்கள் பளபளப்பான கருப்பு, டார்க் க்ரே மற்றும் லைட் க்ரே என மூன்று விதமான தேர்வுகளை கொண்டுள்ளன. உட்புற பாகங்களை போன்று காரின் என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்களை பற்றிய தகவல்களும் வெளிவரவில்லை.
இவை மட்டும் அல்லாமல் வெளிவராத பல சிறப்பம்சங்களுடன் இந்த கே5 செடான் காரை கியா நிறுவனம் தயாரித்திருந்தாலும், இந்நிறுவனத்தின் முதல் இந்திய அறிமுக மாடலான செல்டோஸ் எஸ்யூவியில் பல குறைப்பாடுகள் உள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.
செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

கியா நிறுவனம் கே5 செடானை அடுத்த மாதம் கொரிய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2021 துவக்கத்திலோ தான் அறிமுகமாகும் என தெரிகிறது. ஏனெனில் கியா, 2019 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்திய செல்டோஸை தொடர்ந்து கியா கார்னிவல் எம்பிவியை அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடவுள்ளது.
Most Read:இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி!

இதன் அறிமுகத்திற்கு அடுத்த சில நாட்களிலேயே மூன்றாவது மாடலையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மூன்றாவது மாடல் கிராஸ்-ஹேட்ச்பேக் வகையை சார்ந்ததாக இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் சிறிய அளவிலான கம்பெக்ட் எஸ்யூவிகளை தயாரிக்கும் பணியில் தான் கியா நிறுவனம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.