கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

கியா செல்டோஸ் எஸ்யூவியின் ஜிடி லைன் மாடலில் டீசல் எஞ்சின் தேர்வும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை வரும் 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுவரை 23,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

புதிய கியா செல்டோஸ் காரின் எஞ்சின் விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. அதன்படி, புதிய செல்டோஸ் எஸ்யூவி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளானது டெக் லைன் என்ற பெயரிலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஜிடி லைன் என்ற மாடலிலும் குறிப்பிடப்படுகிறது. மேலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

டெக் லைன் மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் HTE, HTK, HTK+, HTX மற்றும் HTX Plus ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மறுபுறத்தில் ஜிடி லைன் மாடலின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது GTK, GTX மற்றும் GTX Plus ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்க இருக்கிறது.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

இந்த நிலையில், கியா செல்டோஸ் எஸ்யூவியின் ஜிடி லைன் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டீசல் எஞ்சின் தேர்வானது GTX+ என்ற வேரியண்ட்டில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது. ஜிடி லைன் மாடலில் ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் மிக வசீகரமான தோற்றத்துடன் இருக்கும்.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

ஜிடி லைன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய டாப் வேரியண்ட்டானது அராய் மையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது 1.4 லிட்டர் பெட்ரோல் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு இணையான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

விற்பனைக்கு வரும்போது மேற்கண்ட மூன்று எஞ்சின் தேர்வுகளில்தான் கிடைக்கும். ஆனால், சில மாதங்கள் கழித்து இந்த 1.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன் புதிய ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

கியா செல்டோஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வானது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது. தற்போது கியா செல்டோஸ் கார் ஏராளமான சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பதால் வாடிக்கையாளர்களின் ஆவலை வெகுவாக தூண்டி இருக்கிறது.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

இந்த காரில் முன்புற, பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் வழங்கப்பட இருக்கின்றன. 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்7.0 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

மேலும், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில் கார்டுகள், பிரேக் காலிபர்கள், கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளுடன் சீட் கவர்கள், ஸ்டீயரிங் வீல், ரூஃப் ரெயில்கள் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது?

புதிய கியா செல்டோஸ் கார் டிசைன், எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்த தேர்வாக வருவதால் நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Cardekho

Most Read Articles
English summary
KIA Motors is planning to launch Seltos GT line with diesel engine option in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X