காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம

கியா செல்டோஸின் காத்திருப்பு காலம் மிக விரைவில் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக வாகனங்களின் தயாரிப்புகளை அதிகரிக்க ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் தொழிற்சாலையில் இரண்டாவது ஷிஃப்ட்டை கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

இந்த வேலை நேரம் அதிகரிப்பால் இந்நிறுவனம் தயாரிப்பு வாகனங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 15,000 யூனிட்கள் என அதிகரித்துள்ளது. 1000 புதிய பணியாளர்கள் இந்த இரண்டாவது ஷிஃப்ட்டிற்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கியா மோட்டார்ஸிற்கு தேவைப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இந்திய மார்கெட்டில் வெகுவாக குறைந்து வருகிறது.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் காருக்காக 60,000 முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செல்டோஸ் கார், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி மிக விரைவில் இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பாராட்டை பெற்றுள்ளது.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

இந்த இரண்டாவது ஷிஃப்ட் துவக்கத்தால் வாகனங்களின் தயாரிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலமும் குறையும். இதனால் செல்டோஸ் காருக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரும் என கியா நிறுவனம் நம்புகிறது.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

கியா நிறுவனம் இரண்டாவது ஷிஃப்ட்டை துவங்குவதற்கு இன்னொரு காரணம், மூன்றாவது ஷிஃப்ட் வேலைக்கான அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட தான். மேலும் இந்நிறுவனம் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது தயாரிப்பு வாகனங்களாக கார்னிவல் எம்பிவி மற்றும் புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

இந்த இரு மாடல்களும் இந்தியா மார்கெட்டில் அறிமுகமாவதற்குள் தற்சமயம் வருடத்திற்கு 3 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் ஆனந்தபூர் தொழிற்சாலையை ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என்பது தான் கியா மோட்டார்ஸின் நோக்கம்.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

இதில் கியா கார்னிவல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி கார் சிறிது காலம் கழித்து, அதாவது 2020 ஜூலையில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதனை கியா மோட்டார்ஸ் நிறுவனமே செல்டோஸ் மாடல் அறிமுகத்திற்கு முன்னர், இந்த புதிய மாடல் (செல்டோஸ்) வெளியான பின்பு அடுத்த 3 வருடங்களில் இந்தியாவில் ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் எங்களது புதிய தயாரிப்பு மாடல் வெளியாகும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

கியா செல்டோஸ், கார்னிவல் மற்றும் 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி ஆகிய மூன்று மாடல்களும் ஒரே திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி, செல்டோஸ் மாடல் வாடிக்கையாளர்களிடையே மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவியை வேகமாக தயாரித்து அறிவிக்கப்பட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பே வெளியிடும் திட்டமும் கியா நிறுவனத்திடம் உள்ளதாம்.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

இதுகுறித்து கியா மோட்டார்ஸின் சேல்ஸ்& மார்கெட்டிங் துணை முதன்மை அதிகாரி மனோகர் பாட் கூறுகையில், விற்பனையாளர்கள், இந்திய சந்தையை மறு ஒழுங்கமைத்தல் மற்றும் உலகளாவிய விற்பனையுடன் இந்திய விற்பனையை தொடர்வது போன்ற செயல்பாடுகளால் வாகனங்களில் தயாரிப்பை அதிகரிப்பது சிக்கலான செயல்முறையாக உள்ளது. இருப்பினும் நாங்கள் விற்பனை வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இந்தியா எங்களுக்கு ஏற்ற மிக பெரிய சக்தியை வெளிப்படுத்தியுள்ளது என கூறினார்.

காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்

கியா மோட்டார்ஸின் இந்த தயாரிப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியால் முன்பதிவு கார்களுக்கான காத்திருப்பு காலம் விரைவில் குறையவுள்ளது. இதனால் செல்டோஸ் மாடலின் விற்பனை யூனிட்களும் விரைவில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதையெல்லாம் விட போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் விரைவில் வெளியாகவுள்ள எஸ்யூவி காரின் விற்பனையை எவ்வாறு இந்நிறுவனம் கையாள போகிறது என்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது.

Most Read Articles
English summary
Kia Seltos Waiting Period Reduced: Company Increases Production To Meet Demands
Story first published: Tuesday, October 22, 2019, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X