கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் அடித்துள்ள புதிய கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து முன்பதிவு சிறப்பான எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், இந்த காருக்கு தற்போதுள்ள வெயிட்டிங் பீரியட் நிலவரத்தை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

எகிடுதகிடான வரவேற்பு

கடந்த மாதம் 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கியா செல்டோஸ் கார் விற்பனையில் கலக்குகிறது. முதல் மாதத்திலேயே 6,200 கார்கள் விற்பனையாகி அசத்தி உள்ளது.

ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான சவாலான விலைப்பட்டியலில் வந்தததால், இந்த காருக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகிறது.

கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

முன்பதிவு விபரம்

இதுவரை 35,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த புதிய எஸ்யூவி கார் பெற்றுள்ளது. மிக அட்டகாசமான டிசைனில் எக்கச்சக்கமான சிறப்பம்சங்களை கியா செல்டோஸ் கார் பெற்றிருப்பதால், தொடர்ந்து முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது.

கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

காத்திருப்பு காலம்

இந்த நிலையில், தற்போது கியா செல்டோஸ் காருக்கு நிலவும் காத்திருப்பு காலம் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். கியா செல்டோஸ் கார் டெக்லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களில் வந்துள்ளது.

கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

இரண்டு மாடல்கள்

இதில், டெக் லைன் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஜிடி லைன் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றன.

கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

வேரியண்ட்டுகள் விபரம்

டெக்லைன் மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளானது HTE, HTK, HTK+, HTX மற்றும் HTX+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஜிடி லைன் மாடலில் வழங்கப்படும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது GTK, GTX மற்றும் GTX+ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

1.5 லிட்டர் பெட்ரோல் வெயிட்டிங் பீரியட்

HTE மேனுவல் கியர்பாக்ஸ்: 3 மாதங்கள்

  • HTX மேனுவல் கியர்பாக்ஸ்: ஒரு மாதம் அல்லது அதற்குள்ளாகவே டெலிவிரி
  • HTK+ மேனுவல் கியர்பாக்ஸ்: இரண்டு மாதங்கள்
  • HTX CVT: 3 மாதங்கள்
  • கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

    1.5 லிட்டர் டீசல் எஞ்சின் வெயிட்டிங் பீரியட்

    • HTE மேனுவல் கியர்பாக்ஸ்: 3 மாதங்கள்
    • HTK மேனுவல் கியர்பாக்ஸ்: 1 மாதம் அல்லது அதற்குள்ளாகவே டெலிவிரி
    • HTK+ மேனுவல் கியர்பாக்ஸ்: 1 மாதம் அல்லது அதற்குள்ளாகவே டெலிவிரி
    • HTX மேனுவல் கியர்பாக்ஸ்: ஒரு மாதம்
    • HTX+ மேனுவல் கியர்பாக்ஸ்: 2 மாதங்கள்
    • HTX+ ஆட்டோமேட்டிக்: 2 மாதங்கள் அல்லது அதற்குள்ளாக டெலிவிரி
    • கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

      1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் டெலிவிரி

      • GTK மேனுவல் கியர்பாக்ஸ்: 1 மாதம் அல்லது அதற்குள்ளாகவே டெலிவிரி
      • GTX மேனுவல் கியர்பாக்ஸ்: 2 மாதங்கள் அல்லது அதற்கு முன்னதாகவே டெலிவிரி
      • GTX டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்: 3 மாதங்கள்
      • GTX+ டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்: 3 மாதங்கள்
      • கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

        கியா செல்டோஸ் கார் டெலிவிரி

        கியா செல்டோஸ் கார் ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக இந்த ஆலையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது மாதத்திற்கு 5,000 கார்கள் என்ற உற்பத்தி இலக்குடன் செல்டோஸ் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக இருந்தால், உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு சில வேரியண்ட்டை தவிர்த்து, ஒன்று அல்லது 2 மாதங்களுக்குள் டெலிவிரி பெற்றுவிட முடியும்.

        கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்!

        முக்கிய குறிப்பு

        நாடு முழுவதும் நிலவும் பொதுவான காத்திருப்பு காலம் குறித்த விபரம் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நகரத்தை பொறுத்து,காத்திருப்பு காலத்தில் மாறுபாடு இருக்கலாம். உங்களுக்கு அருகாமையிலுள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொண்டு முழுமையான விபரங்களை பெற முடியும்.

Most Read Articles
English summary
It looks like Kia came fully prepared to dominate the Segment. They've offered us one the best in segment SUVs ever, priced it right, and have started deliveries in less than two weeks of launch. In addition, the company seems to have very impressive delivery turn around times. Kudos to the Kia team for getting everything right.
Story first published: Tuesday, September 3, 2019, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X