இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம் வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

தென் கொரியாவின் சியோல் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகப்புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய். இந்த ஹூண்டாய் குழுமத்தின் ஓர் அங்கமாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கியாதான். முதலிடத்தில் இருப்பது ஹூண்டாய்.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

இந்த சூழலில் கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செல்டோஸ் கார், கடந்த ஜூன் 20ம் தேதிதான் அறிமுகம் செய்யப்பட்டது. செல்டோஸ்தான் இந்திய மார்க்கெட்டிற்கான கியா நிறுவனத்தின் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

கியா செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கான முன்பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஜூலை மாத மத்தியில் புக்கிங் தொடங்கலாம். இதற்கெல்லாம் முன்னதாக கியா நிறுவனம் செல்டோஸ் காரை தனது ஹோம் மார்க்கெட்டான தென் கொரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

இந்த சூழலில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ட்யூயல் டோன் ரூஃப்களுடன் கூடிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார்கள் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் தென்பட்டுள்ளன. ஆனால் இவை டீலர்ஷிப்களுக்கு கொண்டு செல்லப்பட்டனவா? அல்லது ஷாப்பில் மால்கள், ஏர்போர்ட் போன்ற இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டனவா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்த்ப்பூர் பகுதியில் தொழிற்சாலையை கட்டமைத்துள்ளது. அங்குதான் செல்டோஸ் எஸ்யூவி கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. கியா செல்டோஸ் கார், ஹூண்டாய் கிரெட்டா காருடன் பிளாட்பார்ம்மை பகிர்ந்து கொண்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் அசத்தி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்று.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

ஆனால் செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் பிரத்யேகமான கியா டீலர்ஷிப்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படவுள்ளன. அதேபோல் சர்வீஸ் சென்டர்களும் வேறுதான். அத்துடன் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களின் டைமன்சன்களும் வெவ்வேறானதுதான். லென்த் மற்றும் வீல் பேஸ் ஆகிய இரண்டு அம்சங்களிலும் கியா செல்டோஸ் நீளமானது.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

கியா செல்டோஸ் காரில் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. அதே சமயம் 115 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

இவை இரண்டும் தவிர, 140 பிஎச்பி பவர் மற்றும் 244 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கியா செல்டோஸ் காரில் கிடைக்கும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா கார் பெங்களூரில் தரிசனம்... ஆகஸ்ட்டில் லான்ச்

எனவே கியா செல்டோஸ் கார் பிஎஸ்-6 இன்ஜின்களுடன்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு, கியா செல்டோஸ் காரின் இன்ஜின்கள் ஹூண்டாய் கிரெட்டா காரிலும் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா செல்டோஸ் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் கியா செல்டோஸ் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Kia Seltos Club India

Most Read Articles
English summary
Kia Seltos Dual tone Spied. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X