ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

இந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அதன் மின்சார மாடலும் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

கியா செல்டோஸ் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஸ்யூவிக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதுடன், எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 மாடலாகவும் மாறி இருக்கிறது.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

இந்த நிலையில், செல்டோஸ் காரின் மின்சார மாடலை கியா மோட்டார்ஸ் உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது. எஸ்பி-2 இவி என்ற குறியீட்டுப் பெயரில் இந்த திட்டத்தை கியா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

அடுத்த ஆண்டு கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடலானது உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு பல்வேறு ஆசிய நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

தற்போது கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆலையிலும், கொரியாவில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்சார மாடலும் இதே ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும்.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

கியா செல்டோஸ் மின்சார காரின் டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளது. கியா சோல் மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் அதே பேட்டரி மற்றும் மின்மோட்டார்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்படும். அதாவது, ஹூண்டாய் கோனா கார் இரு விதமான திறன் கொண்ட பேட்டரியுடன் வெளிநாடுகளில் கிடைக்கிறது.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

இதில், 64kWh லித்தியம் அயான் பேட்டரி கியா செல்டோஸ் மின்சார மாடலில் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

கியா செல்டோஸ் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் வசதியையும் வழங்கும்.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

முதல்கட்டமாக கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஆஹா, அப்படிபோடு... விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாத் புதிய கியா செல்டோஸ் மின்சார மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை கியா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

Source: The Keea

Most Read Articles
English summary
According to report, KIA motor is working on electric version of Seltos SUV and it's expected to unveil globally by next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X