விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பரம் வீடியோ!

விரைவில் இந்திய எஸ்யூவி ரக கார் சந்தையில் கொடிக்கட்டி பறக்க இருக்கும் கியா செல்டோஸ் காரின், முதல் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பர வீடியோ வெளியீடு...!

தென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா மோட்டார்ஸ், செல்டோஸ் எனும் எஸ்யூவி ரக காரை கடந்த 20ம் தேதி தலைநகர் புது டெல்லியில் அறிமுகம் செய்திருந்தது. உலகளாவிய வெளியீடாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடலைத் தான், அந்த நிறுவனம் இந்தியாவில் முதல் மாடலாக விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கியா, இம்மாதத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பர வீடியோ வெளியீடு...!

இந்நிலையில், செல்டோஸ் எஸ்யூவி ரக கார் குறித்த புதிய டீசர் வீடியோ ஒன்றை கியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற வீடியோக்களை கியா நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஆனால், அவையனைத்தும் கியா செல்டோஸை, முழுமையாக காட்சிப்படுத்தவில்லை. அதேசமயம், வெளியான வீடியோக்கள் அனைத்தும் கியாவின் கவர்ச்சிகரமான வடிவைமப்பை, பகுதி பகுதியாக காட்சிப்படுத்தின.

விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பர வீடியோ வெளியீடு...!

இந்தநிலையில், கடந்த வாரத்தில் நடைபெற்ற உலகளாவிய வெளியீட்டின் போதுதான், அந்த கார் முழுமையாக காட்சியளித்திருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் முழுமையாக காட்சியளிக்கும் விதமாகவும், அந்த காரின்மீது ஈர்ப்பை தூண்டும் வகையிலும் புதிய விளம்பர வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உயர் ரக தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இதற்கு முன்னதாக வெளியிட்ட வீடியோக்களையும், தற்போது வெளியாகியிருக்கும் விளம்பர வீடியோவையும் கீழே தொடர்ச்சியாக காணலாம்.

கியா நிறுவனத்தின் இந்த செல்டோஸ் கார் மிகவும் கவர்ச்சியான மற்றும் எதிர்கால டிசைனைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கேற்ப வகையில், அதன் தோற்றம், தொழில்நுட்ப வசதி மற்றும் பாகங்கள் உள்ளிட்டவை சிறப்பான வடிவமைப்பைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், டிஆர்எல் இதயதுடிப்பை விளக்கும் வகையிலான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, ஹெட்லைட், இன்டிகேட்டர் உள்ளிட்டவையும் பிரத்யேகமான வடிவமைப்பப் பெற்றிருக்கின்றன.

இத்துடன், இந்த காரில் ஹூண்டாய் வெனியூ காரில் இருப்பதைப் போன்று ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி அம்சமும் வழங்கப்பட உள்ளது. இந்த அம்சமானது, உலகின் எந்தவொரு மூலையில் இருந்துக்கொண்டு காரை இயக்கலாம். இதனை, இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இ-சிம் வைத்து கட்டுப்படுத்த முடியும். மேலும், ஆட்டோ இன்டலிஜென்ட் திறன் கொண்ட வாய்ஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம் இந்த காரில் வழங்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, இவற்றுடன் கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் இணைக்கப்பட உள்ளன. அந்தவகையில், வென்டிலேடிங் திறன் கொண்ட இருக்கைகள், ஹீடட் ஓஆர்விஎம்கள், பெரியளவிலான நேகிஷன் சிஸ்டம், சன்ரூஃப், மியூஸிக் ஏற்பவாறு எரியக் கூடிய மின் விளக்குகள் மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் மியூஸிக் சிஸ்டம் உள்ளிட்ட சொகுசு வசதிகள் இதில் இடம் பெற உள்ளன. இத்துடன், பிரிமியம் வசதியாக மேனுவலாக இயக்கக்கூடிய பின்பக்க கண்ணாடி திரைச்சீலைகள் வழங்கப்பட உள்ளன.

விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பர வீடியோ வெளியீடு...!

கியாவின் இந்த செல்டோஸ் மாடல் கார், 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜெட் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய மூன்று வகையிலான எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்க இருக்கின்றது. இதில், 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினானது ஹை பெர்ஃபார்மிங் ஜிடி லைன் அப்பில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. அதேசமயம், இந்த காரில் முதல் முறையாக 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கியா நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த ஆப்ஷனில், இந்த செக்மெண்டில் கிடைக்கும் முதல் காரும் இதுதான்.

விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பர வீடியோ வெளியீடு...!

இதைத்தொடர்ந்து, மற்ற பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய ஆப்ஷன்களும் வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த காரில் 4WD அம்சம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக டாடா ஹாரியர் காரில் இருப்பதைப்போன்று, டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பர வீடியோ வெளியீடு...!

அதேபோன்று, இந்த காரில் ரைடிங் மோட், ஸ்டியரிங்க மோட் போன்ற அம்சங்கள் இடம் பெற இருக்கின்றது. இத்தகைய பிரத்யேக அம்சங்களைப் பெறும் இந்த கார் இந்தியாவில் ரூ. 12 லட்சத்திலிருந்து ரூ. 17 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Kia Seltos First TVC With Tiger Shroff Out. Read In Tamil.
Story first published: Monday, June 24, 2019, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X