கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது.. பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் மக்கள்!

கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மாடலான செல்டோஸ் காரின் பாதுகாப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

தென் கொரியா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவில் முதல் முறை கால் தடம் பதிக்கும் விதமாக அதன் புத்தம் புதிய எஸ்யூவி ரக செல்டாஸ் காரை அறிமுகம் செய்தது.

இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை அதீத விற்பனை விகிதத்தைப் பெற்று வருகின்றது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

அந்தவகையில், அதிகபட்சமாக கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான செல்டோஸ் எஸ்யூவி யூனிட்டுகளை கியா நிறுவனம் விற்பனைச் செய்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நான்கு மாதங்களுக்குள்ளாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

இந்த அதீத விற்பனை வளர்ச்சியால் இந்த கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

கியாவின் இந்த வெற்றியைச் சாதாரணமாக கணக்கிட்டுவிட முடியாது, ஏனென்றால் இந்தியா வாகன உலகின் ஜாம்பவான்களாக திகழும் டாடா, மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேலையில் கியா இத்தகையச் சாதனையைப் படைத்தது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

இந்த காரின் அதீத வரவேற்பிற்கு அதில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் குறைவான விலையுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், இந்தியர்கள் இந்த காருக்கு நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கியா செல்டோஸ் கார் விலை, தொழில்நுட்பம் இவைகள் மட்டுமின்றி பாதுகாப்பிலும் சிறந்தது என்பதனை விளக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

புதிய வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் ஆஸ்திரேலியன் புதிய கார் மதிப்பீட்டு குழு (ஏஎன்சிஏபி) கியா செல்டோஸ் காரை விபத்துக்குள்ளாக்கி பரிசோதனைச் செய்தது. இந்த சோதனையில் அது ஐந்திற்கு 5 நட்சத்திரங்கள் என்ற ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

இந்த ரேட்டிங்கானது, கியா செல்டோஸ் கார் அதீத பாதுகாப்பினை வழங்கும் என்பதற்கான சான்றாகும். அதிலும், குறிப்பாக பெரியவர்களின் பாதுகாப்பில் 85 சதவீதமும், சிறுவர்களின் பாதுகாப்பில் 83 சதவீதமும் என்ற தரத்தை பெற்றிருக்கின்றது. இத்துடன், இதன் பாதுகாப்பு அம்சங்கள்குறித்த ரேட்டிங்கில் 70 சதவீதமும், வேறு சில வசதிகளில் 61 சதவீத மதிப்பையும் இந்த கார் பெற்றிருக்கின்றது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

கியா நிறுவனம் இந்த செல்டோஸ் காரை இந்தியா மட்டுமின்றி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் விற்பனைச் செய்து வருகின்றது. எனவே, இந்த மதிப்பு மேற்கூறிய நாடுகளுக்கும் பொருந்தும்.

அதுமட்டுமின்றி, கியா செல்டோஸின் அனைத்து வேரியண்டுகளுக்கும் இந்த ரேட்டிங் பொருந்தும். அதேசமயம், இந்தியாவைக் காட்டிலும் இந்த நாடுகளில் பாதுகாப்பிற்கான விதிகள் கடுமையான இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதன்படி பார்த்தோமேயானால், ஆஸ்திரேலியாவிற்கான கியா செல்டோஸில் அவசகர கால தானியங்கி பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது உயர் ரக மாடல்களில் ரேடார் அடிப்படையில் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி, சாலையின் ஓரத்தில் இருந்து கார் புறப்படும் உராய்ந்துவிடாமல் இருப்பதற்காக ரிமைண்டர் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

ஆனால், இதுபோன்ற வசதிகள் இந்தியாவிற்கான செல்டோஸ் காரில் இடம்பெறவில்லை.

இதற்கு பதிலாக இந்தியாவிற்கான கியா செல்டோஸில் ஆறு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வைத் திறன் கொண்ட கேமிரா மற்றும் முன்-பின் பக்க பார்க்கிங் சென்சார், பிளைண்ட் வியூவ் மாணிட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

கியாவை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பாதுகாப்பு தரத்தில் இத்தனை ஸ்டார்களா..? மகிழ்ச்சியில் செல்டோஸ் ரசிகர்கள்..!

ஒட்டுமொத்தமாக கியா செல்டோஸ் இந்தியாவில் 20 வேரியண்டுகளிலும், டெக் மற்றும் ஜிடி என்ற இரண்டு ட்ரிம்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மொத்தமாக ஆறு வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது இந்த செல்டோஸ்.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இனி குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்களில் இந்திய கார்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.உலகிலேயே விபத்து அபாயம் அதிகம் நிறைந்த சாலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்தியாவில், பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என நீங்கள் விரும்புபவர் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

எக்காரணத்தை கொண்டும் நீங்கள் தகர டப்பாக்களை நம்ப வேண்டாம். இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார் எது? என்ற தகவலையும் பின்வரும் ஸ்லைடர்களில் வழங்கியுள்ளோம். இதில், நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய தகவல்களும் அடங்கியுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 5 ஆண்டுகளில் (2014-2019), இந்தியாவின் 25 கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்துள்ளது. இதில், ஒரு சில கார்கள் ஒருமுறைக்கு மேல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இதன் முடிவுகளில் பல்வேறு முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன. குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுடன் ஒப்பிடும்போது, அதிகம் விற்பனையாகும் கார்கள் குறைவான ஸ்கோரை மட்டுமே பெற்றுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி அமைப்பால் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் இதனை தெளிவாக காட்டுகின்றன. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற ஒரு சில கார்கள் இதற்கு விதிவிலக்கு.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற ஒரே இந்திய கார் நெக்ஸான்தான். போட்டியாளர்களைவிட விற்பனையில் பின்தங்கியிருந்தாலும், பாதுகாப்பு விஷயத்தில் போட்டியாளர்களை வீழ்த்துகிறது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

2018ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெக்ஸான் கார்களும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் தரநிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

நெக்ஸானுக்கு அடுத்தபடியாக மஹிந்திரா மராஸ்ஸோ 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பட்டியலில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற ஒரே ஒரு எம்பிவி கார் இதுதான்.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

நெக்ஸானை போல் விற்பனையில் சற்று பின்தங்கினாலும், பாதுகாப்பு என்ற விஷயத்தில் மராஸ்ஸோ தனது போட்டியாளர்களை வீழ்த்தி விடுகிறது. கடந்த செப்டம்பரில் எம்பிவி ரகத்தில் 6வது இடத்தில் உள்ளது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

பிற ரகத்தில் டொயோட்டா எட்டியோஸ், டாடா ஜெஸ்ட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

மாருதி எர்டிகா, ஃபோர்டு அஸ்பயர், ஹோண்டா மொபிலியோ, ரெனால்ட் டஸ்டருக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கையும், மாருதி ஸ்விப்ட், வேகன் ஆர், ஹூண்டாய் சாண்ட்ரோவுக்கு 2 ஸ்டாரும் பெற்றன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இவை சிறப்பாக விற்பனையாக கூடிய கார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததையும், மலிவு விலை நோக்கமும் தெளிவாக காட்டுகிறது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

எனினும், வரும் காலத்தில் பாதுகாப்பு விஷயத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புது கார்களுக்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு வரிசையாக கட்டாயமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள டாடா நெக்ஸான், இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற ஒரே இந்திய காரான டாடா நெக்ஸான், விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளை காப்பாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

டாடா நெக்ஸான் கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு சம்பவம் சமீபத்தில் கூட நடைபெற்றது. கோர விபத்தில் இருந்து அதன் உரிமையாளரை டாடா நெக்ஸான் கார் காயமின்றி காப்பாற்றி நம் அனைவரையும் மீண்டும் ஒரு முறை பெருமைப்பட வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் சிறப்பான கட்டுமான தரத்துடன் கூடிய பாதுகாப்பான கார்களை தயாரித்து வருகிறது. இதற்கு நெக்ஸான் காரை ஒரு உதாரணமாக சொல்லலாம். கார் க்ராஷ் டெஸ்ட்டிங் ஏஜென்சியான குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான்.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

தற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் உடன் இருக்கும் ஒரே ஒரு இந்திய காரும் நெக்ஸான்தான். குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. டாடா நெக்ஸான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

டாடா நெக்ஸான் உரிமையாளர்கள் பலர் அதன் சிறப்பான கட்டுமான தரத்தையும், பாதுகாப்பு வசதிகளையும் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் சாலை விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் பல முறை காப்பாற்றியுள்ளது. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு சாலை விபத்து தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

ஆனால் இம்முறையும் டாடா நெக்ஸான் கார் அதன் உரிமையாளரை பத்திரமாக காப்பாற்றி விட்டது. தில்பிரீத் சிங் என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவரிடம் டாடா நெக்ஸான் கார் ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தனது டாடா நெக்ஸான் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அது நள்ளிரவு சமயம்.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

அப்போது மிகவும் குறுகலான சாலை ஒன்றில் அவரது டாடா நெக்ஸான் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தில்பிரீத் சிங்கிற்கு எதிர் திசையில் மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல் அது மிகவும் குறுகலான சாலை. ஆனால் எதிர்திசையில் வந்த வாகனத்தின் டிரைவர் வேகத்தை குறைக்கவில்லை. மேலும் அவருக்கு வழிவிடவும் இல்லை.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

எனவே அந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதாமல் இருப்பதற்காக தில்பிரீத் சிங் தனது டாடா நெக்ஸான் காரை திருப்பினார். அப்போது நிலை தடுமாறிய அவரது கார் சாலையோரமாக இருந்த அரச மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அந்த சமயத்தில் கார் எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது என்பது தில்பிரீத் சிங்கிற்கு சரியாக நினைவில்லை.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

எனினும் மணிக்கு 55-60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சென்று கொண்டிருந்திருக்கலாம் என தில்பிரீத் சிங் தெரிவித்தார். விபத்து நேரும் சமயங்களை பொறுத்தவரை இது மிகவும் அதிவேகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

ஆனால் இங்கே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்து தில்பிரீத் சிங்கின் உயிரை காப்பாற்றி விட்டன. அத்துடன் வேதனை தரக்கூடிய அளவிற்கான காயங்கள் எதுவும் கூட அவருக்கு ஏற்படவில்லை. இதற்காக தனது டாடா நெக்ஸான் காருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

இதில், ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் பில்லர்கள் அப்படியே நல்ல வடிவில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் டிரைவர் சைடு டோர் கூட இன்னும் வேலை செய்ய கூடிய நிலையில் இருப்பதாகதான் கூறப்படுகிறது. விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிய தனது நெக்ஸான் கார் குறித்த கூடுதல் தகவல் ஒன்றை தில்பிரீத் சிங் கூறியுள்ளார்.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

விபத்தில் சிக்கிய தனது டாடா நெக்ஸான் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முந்தைய மாடல் என தில்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அதாவது இது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான் கிடையாது. 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தன.

மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

அதன்பின்பு டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தி, குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இருந்தபோதும் 4 ஸ்டார் ரேட்டிங் உடன் கூடிய நெக்ஸானே எவ்வளவு பாதுகாப்பான கார்? என்பதை இந்த விபத்தின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Most Read Articles
மேலும்... #கியா #kia motors
English summary
Kia Seltos Gets 5 Star Safety Rating In ANCAP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X