செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து முன்பதிவு குவிந்து வருவதால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

பொதுவாக புதிதாக அறிமுகமாகும் கார்களுக்கு முதல் ஓரிரு மாதங்கள் முன்பதிவும், விற்பனையும் சிறப்பாக இருக்கும். ஆனால், தொடர்ந்து அந்த எண்ணிக்கையை தக்க வைக்க இயலாத நிலை ஏற்படும். ஆனால், இந்த வழக்கத்திலிருந்து சில கார்கள் மாறி, முன்பதிவிலும், விற்பனையிலும் தொடர்ந்து அசரடிக்கும்.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

இந்த பட்டியலில் சமீபத்திய வரவாக கியா செல்டோஸ் எஸ்யூவி கார் மாறி இருக்கிறது. செல்டோஸ் காருக்கான புக்கிங் 50,000 என்ற இமாலய எண்ணிக்கையை கடந்துள்ளது. அதுவும் மிக குறுகிய காலத்தில் இந்த புதிய புக்கிங் சாதனையை கியா செல்டோஸ் எஸ்யூவி கார் படைத்துள்ளது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 13,750 செல்டோஸ் கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது வேரியண்ட்டை பொறுத்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

கியா செல்டோஸ் கிடைத்துள்ள 50,000 புக்கிங்கில் 50 சதவீதம் அளவுக்கு 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலுக்கும், 30 சதவீதம் பேர் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கும், 20 சதவீதத்தினர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் தேர்வு செய்துள்ளனர்.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

புதிய கியா செல்டோஸ் காரின் அற்புதமான டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எல்இடி ஹெட்லைட்டுகள், புலிமூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு, ஆளுமையானத் தோற்றம் என மிக கவர்ச்சியாக இருக்கிறது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

கியா செல்டோஸ் காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 115 எச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

டாப் வேரியண்ட்டுகளில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிமோட் முறையில் பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை தரும் யுவோ செயலி, சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள்,360 டிகிரி கேரா, லெதர் இருக்கைகள், 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

செல்டோஸ் காருக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் கியா!

கியா செல்டோஸ் காரின் விலையும் முக்கிய காரணம். இந்த கார் ரூ.9.69 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் கிடைப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது. ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு நேர் போட்டியாக உள்ளது.

Most Read Articles
English summary
Kia Seltos SUV has recieved 50,000 bookings in India.
Story first published: Thursday, October 10, 2019, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X