இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

அண்மையில் இந்தியாவில் அறிமுகமாகி, அனைத்து நிறுவனங்களின் விற்பனைச் சாதனையையும் முறியடித்து வரும் கியா செல்டோஸ் காரை தொழிலதிபர் அவரது மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இந்திய எஸ்யூவி சந்தையை புரட்டிப்போடும் வகையில் கியா நிறுவனம், இந்தியாவிற்கான முதல் மாடல் செல்டோஸை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த கார் தற்போது எஸ்யூவி ரக கார்கள் இதுவரை செய்யாத அளவிலான விற்பனை புரட்சியைச் செய்து வருகின்றது.

இதற்கு இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சொகுசு வசதிகளும், விலையுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இந்திய வாகன சந்தை நடப்பாண்டு தொடங்கியது முதல் கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இந்த நிலையில், கியா நிறுவனம் இந்தியாவிற்கான முதல் மாடல் செல்டோஸை களமிறக்கியது.

இதற்கு இந்தியா வாகனச் சந்தையில் கடும் விமர்சனங்கள் கிளம்பின. இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனமான டாடா நிறுவனமே இந்த மந்த நிலையில் சிக்கி தவித்து வரும்நிலையில், கியா பெரும் பின்விளைவைச் சந்திக்கும் என கூறப்பட்டது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

ஆனால், இந்த விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில், செல்டோஸ் எஸ்யூவிக்கான புக்கிங் இமாலய அளவில் குவிந்து வருகின்றது.

அதுமட்டுமின்றி, இதுவரை எஸ்யூவி ரக கார்களுக்கு கிடைக்காத அளவிலான டிமாண்ட் இந்த காருக்கு கிடைத்திருக்கின்றது. இதேபோன்றதொரு டிமாண்டை எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹூண்டாய் வெனியூ கார்களும் பெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இந்த அதீத வரவேற்பினால், கியா செல்டோஸ் காருக்கான காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, இந்த காரின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் கியா நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

எனவே, இந்தியர்கள் கியா செல்டோஸ் காரை பெற தவமிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், இது இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இந்நிலையில், இந்தியாவின் பேசு பொருளாய் மாறியுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி ரக காரை திருமண வெள்ளி விழாவை முன்னிட்டு தொழிலதிபர் ஒருவர், அவரது மனைவிக்கு பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்றினை அனிகெத் சாப்ரா என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

MOST READ: லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

இதற்கு முன்னதாக கியா செல்டோஸ் இதுபோன்று பரிசாக வழங்கியதாக தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், கியா செல்டோஸ் காரை பரிசாக அளிப்பது இதுவே முதல் முறை என தெரிகின்றது.

MOST READ: விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

கியா செல்டோஸின் எந்த வேரியண்ட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால், அதன் டெக் லைனை வைத்து பார்க்கையில் நடுத்தர வேரியண்டாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அதேசமயம், அந்த கார் அன்றைய தினமே அவர்களுக்கு டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

கியாவின் இந்த செல்டோஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களிள் ஒன்றாக மாறி வருகின்றது. அந்தவகையில், இந்தியர்களின் பிரபல மாடலாக இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவை அண்மையில் அது வீழ்த்தியது.

பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 9.69 லட்சம் என்ற விலையில் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இந்த பேஸ் வேரியண்டில் பிரிமியம் வசதிகளாக சுறா துடுப்பு அமைப்பிலான ஆன்டென்னா, ஸ்கிட் பிளேட், புரஜெக்டர் ஹெட்லேம்ப், நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக், பவர் விண்டோஸ், இரு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஸ்டியரிங் வீல் மவுண்டட் கன்ட்ரோல்கள், தேவைக்கேற்ப உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்கின்ற வகையிலான ஸ்டியரிங் வீல், கீ லெஸ் என்ட்ரீ, பின் பக்கத்தில் அமர்பவர்களுக்கான ஏசி வென்ட் மற்றும் யுவிஓ லைட் (இணையதள வசதி) உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் காணப்படுகின்றது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இதேபோன்று, கியாவின் டாப் எண்ட் வேரியண்டில் பார்த்தோமேயானால் எக்கசக்க சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது. அந்தவகையில், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய இருக்கை, 360 டிகிரி கேமிரா, வென்டிலேடட் இருக்கை, முன் பின் பக்க பார்க்கிங் சென்சார், பிளைண்ட் ஸ்பாட் கேமிரா, காற்று வடிகட்டி, யுவிஓ கன்னெக்ட் அம்சம், பிரேக் அசிஸ்ட், ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் காணப்படுகின்றது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

கியா செல்டோஸ் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், 1.5 லிட்டர் தேர்வில் கிடைக்கும் எஞ்ஜின் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

தொடர்ந்து, டீசல் தேர்வில் கிடைக்கும் எஞ்ஜின் 1.5 கொள்ளளவில் காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவையிரண்டும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கின்றது.

இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

கியா செல்டோஸ் மாடலில் அதிக சக்தி கொண்டதாக 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது, 7 ஸ்பீடு ட்யூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்மிஷனில் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia Seltos Gifted To Wife By Husband For 25 Anniversary. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X